14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

இலங்கையில் பயணத்தடை குறித்து வெளியான அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, மாகாணங்களுக்கு இடையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் யாவும் திங்கட்கிழமை முதல் முழுமையாக நீக்கப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மே மாதம் 11 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில், மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்து.

அந்தத் தடை மே மாதம் 30ஆம் திகதி வரை மட்டுமே அமுல்படுத்தப்படுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், கொ​ரோனா தொற்றின் வேகம் அதிகரித்தமையால், அந்தத் தடை நீடிக்கப்பட்டது.

எனினும், இதுதொடர்பில் கருத்துரைத்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, “பயணத்தடையை நீக்குவது தொடர்பில் உத்தியோகபூர்வமாக இதுவரையிலும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை” என்றார்.

Related posts

வரும் மூன்று தினங்களுக்கான மின்வெட்டு நேரம் இதோ!

SudarSeithy

அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணம்!! – இன்று முதல் நடைமுறைக்கு

SudarSeithy

றம்புக்கணை துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் அதிரடி உத்தரவு!

SudarSeithy