19.9 C
Manchester
7 July 2022
Image default
தொழில்நுட்பம்

பயனர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அம்சம் இப்போ வாட்ஸ்அப்பில் வந்தாச்சு

சமூக வலைதளமான வாட்ஸ்அப்பை மெட்டா நிறுவனம் வாங்கிய பின்னர், அதில் அந்நிறுவனம் பல்வேறு சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது.

பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் பல்வேறு அப்டேட்டுகளை வழங்கி வரும் அந்நிறுவனம் தற்போது பயனர்கள் ஆவலோடு கேட்டுக்கொண்டிருந்த ஒரு சிறப்பம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

அது என்னவென்றால், வாட்ஸ்அப்பில் நீங்கள் பதிவிடும் ஸ்டேட்டஸ், புரபைல் போட்டோ, லாஸ்ட் சீன் ஆகியவற்றின் பிரைவசி ஆப்சனில் My contacts except.. என்கிற புதிய அம்சம் தான் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுவரை உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்டின் புரபைல் போட்டோ, லாஸ்ட் சீன் மற்றும் நீங்கள் பதிவிடும் ஸ்டேட்டஸ் ஆகியவற்றை அனைவரும் பார்க்கலாம், காண்டாக்டில் உள்ளவர்கள் மட்டும் பார்க்கலாம், யாரும் பார்க்கக்கூடாது என்கிற 3 ஆப்சன்கள் மட்டுமே இருந்தது.

ஆனால் தற்போது சேர்க்கப்பட்டுள்ள மை காண்டாக்ட் எக்சப்ட் என்கிற அம்சம் மூலம் உங்கள் காண்டாக்ட்டில் இருப்பவர்களில் யாருக்கெல்லாம் உங்களது ஸ்டேட்டஸ், புரபைல் போட்டோ, லாஸ்ட் சீன் ஆகியவை காட்டப்பட வேண்டும் என்பதை உங்களால் தேர்ந்தெடுக்க முடியும். விரைவில் இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

வாட்ஸ் ஆப்பில் அடிக்கடி சேரும் மெமரியை சுலபமாக நிறுத்துவது எப்படி?

SudarSeithy

Amazon Prime Watch Party – வீட்டில் இருந்தபடியே நண்பர்களுடன் சேர்ந்து படம் பார்ப்பது எப்படி?

SudarSeithy

பறக்கும் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் உருவாக்கும் விவோ

SudarSeithy