களுத்துறை மாவட்டம், மத்துகம – அகலவத்தை எரிபொருள் நிலையத்தில் தமது மோட்டார் சைக்கிளுக்குப் பெட்ரோலைப் பெற்றுக்கொள்வதற்காக மூன்று நாட்களாகக் காத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லொறி ஒன்று மோதியதில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த குறித்த நபர் பலியாகியுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் பதுரலியவை சேர்ந்த 55 வயதான இத்தகொட ஹேவகே ஜகத் என்பவரே உயிரிழந்துள்ளார்.
பதுரலியவில் இருந்து அகலவத்தை நோக்கிப் பயணித்த லொறி வீதியை விட்டுவிலகி விபத்துக்குள்ளானதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.