இலங்கையிலிருந்து இத்தாலி நாட்டுக்கு செல்பவர்களுக்கான கட்டாய தனிமைப்படுத்தல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் ரொபர்ட்டோ ஸ்பெரன்சோ இதனைத் தெரிவித்துள்ளார். இத்தாலி ஐந்து நாட்களுக்கான குறுங்கால தனிமைப்படுத்தல் நடைமுறை ஒன்றை அமுல்படுத்தியுள்ளது.
இதற்குள் பிரித்தானியா உள்ளடக்கப்படுகின்ற போதும், இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து பிரவேசிக்கும் பயணிகள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும்.
இதற்கான உத்தரவு நேற்று கைச்சாத்திடப்பட்ட நிலையில், அது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.