18.9 C
Manchester
7 July 2022
Image default
இலங்கை

அரசஊழியர்கள் பணிக்கு அழைப்பு; ஆசிரியர்களும் சமூகமளிக்க வேண்டுமா!

திங்கள் முதல் அரச சேவையாளர்களை வழமைப்போன்று கடமைகளுக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ள போதிலும், அது ஆசிரியர்களுக்கு தாக்கம் செலுத்தாது என கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச நிறுவனங்கள் நாளை மறுதினம் முதல் வழமைப்போன்று இயங்கவுள்ளன. எனினும் பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருப்பதால், குறித்த சுற்றுநிருபம் ஆசிரியர்களுக்கு தாக்கம் செலுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாடசாலைகளை மீள திறப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

அவ்வாறான அனுமதிகள் வழங்கப்பட்டால் ஆசிரியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

Related posts

பொலிஸ் மா அதிபரின் விஷேட அறிவிப்பு!

SudarSeithy

நாடாளுமன்ற வீதி முடக்கப்பட்டமையினால் யுவதிக்கு ஏற்பட்ட பரிதாபநிலை

SudarSeithy

பிறப்பு, திருமணம், இறப்பு சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் இடைநிறுத்தம்

SudarSeithy