இலங்கையில் நாளை முதல் மக்கும் தன்மையற்ற பொலீத்தினால் உற்பத்தி செய்யப்படும் லஞ்சீற்றுகள் தடை செய்யப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதன்படி மக்கும் தன்மையற்ற பொலித்தீனால் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து வகையான லஞ்சீற்றுகளின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை என அனைத்தும் நாளை முதல் தடை செய்யப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பிலான சோதனை நடவடிக்கைகளை மத்திய சுற்றாடல் அதிகார சபை, நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் பொலிஸார் இணைந்து நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.
மக்கும் தன்மையற்ற லஞ்சீற்றுகளால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளை கருத்திற் கொண்டே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.