வாழ்க்கைமுறை

வைரஸ்களிடமிருந்து தப்பித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திரிகடுகம் காபி! எப்படி தயாரிப்பது?

பொதுவாக சிலருக்கு பருவமாற்றத்தின் காரணமாக கூட உடல் நலகுறைவு ஏற்படுகின்றது.

இவற்றின் முக்கிய காரணம் என்னவென்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவின் காரணமாகவே இம்மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இந்த மாதிரியான நிலையில் காபி, டீக்குப் பதிலாக இந்த திரிகடுகம் காபியை இடைப்பட்ட நேரத்தில் குடித்துவருவது மிகவும் நல்லது.

அந்தவகையில் தற்போது நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் திரிகடுகம் காபி எப்படி தயாரிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • மிளகு – 30 கிராம்
  • சுக்கு – 50 கிராம்
  • திப்பிலி – 5 கிராம்
  • கருப்பட்டி – தேவையான அளவு
  • காபி தூள் – 2 ஸ்பூன்
செய்முறை

மிளகு, சுக்கு, திப்பிலி ஆகியவற்றை நன்றாக பொடித்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் கருப்பட்டியை போட்டு கரைந்த பின்னர் காபி தூள், திரிகடுகம் பொடி சேர்த்து கலந்து 5 நிமிடம் கொதித்தவுடன் இறக்கி மூடி வைக்கவும்.

தூள் தெளிந்தபின்னர் வடிகட்டி சூடாக பருகவும். இதை பால் சேர்க்காமல் அருந்த வேண்டும். காலை – மாலை இரு வேளை குடிப்பது நல்லது.

Bigg Boss Tamil – Season 4 – DAY 10 [14.10.2020] – Video

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Health News Facebook :- Liked

Facebook Group :- Joined

Health News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

11 வயது சிறுமியின் கண்களில் தினமும் வரும் இரத்தக் கண்ணீர்! குழம்பி போன மருத்துவர்கள்: பின்னர் தெரிந்த உண்மை

அம்மு

பெண்கள் தினமும் கருப்பட்டி சாப்பிட்டால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

அம்மு

முளைக்கட்டிய தானியங்களில் எவ்வளவு சக்தி இருக்குன்னு தெரியுமா? தெரிந்தால் தூக்கிஎறிய மாட்டீர்கள்?

அம்மு