வாழ்க்கைமுறை

அடிக்கடி பல் வலி கடுக்குதா? இதை சட்டென குறைக்க என்ன பண்ணலாம்?

நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. ஒருவருக்கு பல் வலி எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

பல் அல்லது ஈறுகளில் தொற்றுக்கள் ஏதேனும் ஏற்பட்டிருந்தால், அப்பகுதியில் வீக்கம் மற்றும் ஈறுகளில் கிருமிகள் நிறைந்த திரவம் நிரம்பியிருக்கும். இந்நிலையில் கடுமையான மற்றும் கூர்மையான பல் வலியால் அவஸ்தைப்படக்கூடும்.

இம்மாதிரியான சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு பல் வலிக்கு நிவாரணம் காணலாம்.

அந்தவகையில் பல் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் இயற்கை வழிகள் என்னவென்று தற்போது இங்கு பார்ப்போம்.

  • 1/2 டீ ஸ்பூன் உப்பை எடுத்து ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து பற்களில் படும்படி கொப்பளியுங்கள். உப்பு நீரைக் கொண்டு எழுவது வீக்கத்தை குறைக்கவும், வாய்வழி காயங்களை குணப்படுத்தவும் உதவுகிறது.
  • ஹைட்ரஜன் பெராக்சைடை முதலில் நீர்த்துப்போக செய்ய வேண்டும். 3 சதவீத ஹைட்ரஜன் பெராக்ஸைடுடன் நீரை சம அளவு கலந்து மவுத்வாஷாக பயன்படுத்துங்கள். அதை விழுங்க கூடாது. ஹைட்ரஜன் பெராக்ஸைடு வலி மற்றும் வீக்கத்தை போக்க உதவுகிறது. இது பாக்டீரியாக்களை கொல்லும்.
  • பயன்படுத்திய தேநீர் பையை எடுத்து ஓரிரு நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்து குளிர்வியுங்கள். பிறகு இதை பற்களில் வைத்து ஒத்தடம் கொடுங்கள். தேநீர் பையை சூடாக இருக்கும் போது கூட பயன்படுத்தி வரலாம். இது உங்க பல்வலியை குறைக்க பயன்படுகிறது.
  • ஒரு பூண்டை நசுக்கி பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த பூண்டை பயன்படுத்துங்கள். பூண்டு விழுதுக்கு சிறிது உப்பு கூட நீங்கள் சேர்த்து கொள்ளலாம். சில பூண்டுகளை வாயில் போட்டு மெல்லுங்கள். இது உங்க பல்வலியை குறைக்கும்.
  • ஒரு பருத்தி பஞ்சில் ஒரு சில துளிகள் கிராம்பு எண்ணெய்யை போட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவலாம். கிராம்பு எண்ணெய்யை தனியாக பயன்படுத்தக் கூடாது. ஆலிவ் எண்ணெய்யுடன் நீர்த்துப் போகச் செய்து பயன்படுத்துங்கள். ஒரு துளி அல்லது இரண்டு துளி கிராம்பு எண்ணெய்யை நீரில் விட்டு மவுத்வாஷாக கூட நீங்கள் பயன்படுத்தி வரலாம்.

Bigg Boss Tamil – Season 4 – DAY 10 [14.10.2020] – Video

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Health News Facebook :- Liked

Facebook Group :- Joined

Health News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

சளி, இருமலில் இருந்து விடுபடனுமா? இதோ சில அட்டகாசமான வைத்தியங்கள்!

அம்மு

குறைந்த ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க வேண்டுமா? இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க

அம்மு

முழு முயற்சியே வெற்றிக்கு வழி

அம்மு