ஆன்மீகம்

12 ராசியில் இந்த ராசிக்கார பெண்கள் மட்டும் உலகையே பிரமிக்க வைப்பார்களாம்!

ஒவ்வொரு தனி நபருக்கும் ஒரு தனிப்பட்ட குணமும், ஆளுமையும் உண்டு,

12 ராசிக்காரர்களுள் எந்தெந்த ராசி பெண்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசி பெண்கள் கட்டுப்படுத்தும் ஆற்றல் மற்றும் சக்தியின் வடிவமானவர்கள்.

இவர்கள் எப்பொழுதும் கட்டளைகளை பிறப்பிக்கும் தலைமை பொறுப்பில் இருப்பார்கள்.

மேஷ ராசி பெண்கள் தங்களிடம் இருக்கும் சக்தியை பற்றி முழுமையாக அறிந்திருப்பார்கள் அதனால் அதனை கவனமாகவும், விவேகமாகவும் பயன்படுத்துவார்கள்.

பின்விளைவுகளை பற்றி சிந்திக்காமல் இவர்கள் எந்த செயலிலும் இறங்க மாட்டார்கள். இவர்களின் வெற்றியை உலகமே பிரம்மிப்புடன் பார்க்கும்.

இவர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தும் ராணிகளாக இருப்பார்கள்.

ரிஷபம்

தன்னம்பிக்கையும், நற்குணமும் வாய்க்கப்பெற்ற பெண்கள் இவர்கள். இவர்களுக்குள் இருக்கும் உற்சாகமும், உந்துசக்தியும் இவர்களை தலைசிறநதவர்களாக காட்டும்.

தான் விரும்பியதை அடைவதற்காக எந்த சூழ்நிலையையும் தைரியமாக எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்டவர்கள் இவர்கள்.

உதவி தேவைப்படுபவர்களுக்கு அன்புடனும், அக்கறையுடனும் உதவி செய்ய இவர்கள் எப்பொழுதும் தயாராய் இருப்பார்கள்.

மிதுனம்

மிதுன ராசி பெண்கள் உலகின் சிறந்த சிந்தனையாளர்களாகவும், படைப்பாளிகளாகவும் இருப்பார்கள்.

இவர்களின் கற்பனைத்திறன் இவர்களை விரும்பும் உயரத்திற்கு அழைத்துச் செல்லும். ஏனெனில் கனவு காண்பது மட்டுமின்றி அதனை அடையும் திறமையும் இவர்களிடம் இருக்கும்.

இவர்கள் யார் மீதும் ஆதிக்கம் செலுத்த மாட்டார்கள், அதற்காக இவர்கள் பலவீனமவர்கள் என்று அர்த்தமல்ல.

தங்கள் பலத்தை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று நன்கு அறிந்தவர்கள் இவர்கள். இவர்கள் தங்கள் கற்பனைகளை பேசத் தொடங்கினால் அனைவரும் மெய்மறப்பது உறுதி.

கடகம்

கடக ராசி பெண்களை நடமாடும் புதிர் என்று சொன்னால் அது மிகையாகாது.

ஏனெனில் இவர்கள் ஒருபுறம் கடுமையானவர்களாகவும், உணர்ச்சிவசப் படக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். மறுபுறம் தாராள குணமும், அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

தனது மனநிலையை ஒரு நொடியில் மாற்றிக்கொள்ள கூடிய தந்திரம் தெரிந்தவர்கள் இவர்கள்.

எந்த உறவாக இருந்தாலும் இவர்கள் அதில் நேர்மையாகவும், உண்மையாகவும் இருப்பார்கள். அதேசமயம் துரோகத்தை இவர்களால் ஒருபோதும் தாங்கிக்கொள்ள இயலாது.

சிம்மம்

இவர்களின் தொலைநோக்கு பார்வையும், சீரிய சிந்தனையும் இவர்களை சிறந்த தலைவராக மாற்றும். இலட்சியத்தை அடைய முற்படும் போது அவர்கள் எதற்காகவும் நிற்க மாட்டார்கள்.

இவர்கள் தான் வெற்றிபடிக்கட்டுகளில் ஏறும்போது எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறார்களோ தங்களுடன் இருப்பவர்களையும் அழைத்து செல்லும்போது அதிக மகிழ்ச்சி அடைவார்கள்.

தோல்வி ஒருபோதும் இவர்களின் முன்னேற்றத்தை நிறுத்தாது. சிம்ம ராசி பெண்கள் மனவலிமை மற்றும் நல்லொழுக்கத்தின் சிறந்த கலவையாகும்.

கன்னி

கன்னி ராசி பெண்கள் நல்லொழுக்கத்தின் வடிவமாவார்கள். இவர்கள் எப்பொழுதும் எளிதான வழியைக் காட்டிலும் சரியான வழியை தேர்ந்தெடுப்பதில் இவர்கள் கவனமாக இருப்பார்கள்.

கன்னி ராசி பெண்கள் கிடைப்பவர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள். அன்பு, கனிவு மற்றும் உதவும் குணம் என அனைத்தும் இவர்களிடம் நிறைந்திருக்கும்.

இவர்கள் காயப்படும்போது கூட அதனை சமாளித்து மீண்டும் எதிர்த்து போராடுவார்களே தவிர மற்றவர்களுக்கு தீங்கு நினைக்க மாட்டார்கள்.

துலாம்

துலாம் ராசி பெண்கள் புத்திசாலித்தனம், நகைச்சுவை உணர்வு என அனைத்தும் நிறைந்த கலவையாவர். இவர்களின் புரிந்துணர்வும், ஆழமான சிந்தனையுடன் இவர்களின் நகைச்சுவை உணர்வும் சேர்ந்து இவர்களை மிகவும் ரசனையாளர்களாக மாற்றும்.

துலாம் பெண்கள் வாழ்க்கையை கண்ணியத்துடனும் சமநிலையுடனும் அணுகுகிறார்கள், அவர்கள் அரிதாகவே தங்கள் உணர்ச்சிகளை பகிரங்கமாகக் காட்டுவார்கள்.

அவர்கள் எப்போதுமே அவர்கள் யார் என்பதோடு ஒத்துப்போகிறார்கள், மேலும் அவர்களின் சுய விழிப்புணர்வு அவர்கள் வாழ்க்கையில் விரும்பும் விஷயங்களை உறுதிப்படுத்துகிறது.

இவர்கள் சாதாரண பெண்களுடன் ஒப்பிடும்போது இவர்கள் மிகவும் வித்தியாசமானவர்களாக இருப்பார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி பெண்கள் எப்பொழுதும் தங்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள்.

விருச்சிக ராசி பெண்கள் எப்பொழுதும் விழிப்புணர்வுடனும், புத்திக்கூர்மையுடனும் இருப்பார்கள், தான் யார் தங்களின் தேவை என்ன என்பதில் இவர்களுக்கு எப்பொழுதும் ஒரு தெளிவு இருக்கும்.

இவர்கள் கொடூரமான நேர்மையுடன் இருப்பார்கள் அதனால் மற்றவர்கள் காயப்பட்டாலும் இவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.

விருச்சிக ராசி பெண்களை அனைவராலும் கட்டுப்படுத்த முடியாது.

தனுசு

தனுசு ராசி பெண்கள் நம்பமுடியாத அளவிற்கு உணர்திறன் உடையவர்கள், அவர்கள் உணர்ச்சிகளையும் மற்றவர்களின் உணர்ச்சிகளையும் நன்கு புரிந்துகொள்கிறார்கள்.

மற்றவர்களை புரிந்து கொள்வதற்காக இவர்கள் அவர்களின் நிலையில் இருந்து அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயலுவார்கள்.

இவர்கள் தங்கள் உணர்ச்சிகளை மிகவும் பாதுகாப்பகை வெளிப்படுத்துவார்கள்.

இவர்களின் உண்மையான முகத்தை ஒருசிலருக்கு மட்டுமே இவர்கள் காட்டுவார்கள்.

மகரம்

மகர ராசி பெண்கள் சுயசிந்தனையும், சுதந்திர உணர்வும் கொண்டவர்கள். தாங்கள் யார் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதில் இவர்களுக்கு எந்த குழப்பமும் இல்லை.

தங்களின் பலம் மற்றும் பலவீனம் என்னவென்று இவர்கள் நன்கு அறிவார்கள்.

இதனால் வாழ்க்கையில் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று இவர்களுக்குத் தெரியும். அவர்களின் தெளிவான உள் அழகு மற்றவர்களுக்கு உத்வேகம் தருவதாக இருக்கும்.

ஏனெனில் இவர்கள் அளவிற்கு தன்னை பற்றி உணர்ந்தவர்கள் யாரும் இருக்க முடியாது.

கும்பம்

கனவு காண்பதற்காகவும், போராடுவதற்காகவுமே பிறந்தவர்கள் கும்ப ராசி பெண்கள்.

கும்ப ராசி பெண்கள் உயர்ந்த இலட்சியங்களை அடைய போராடுவார்கள், அவர்களின் இலட்சியத்தை அடையும்வரை எதற்காகவும் அமைதியாக இருக்க மாட்டார்கள்.

இவர்களின் போராட்டத்தை பார்ப்பதே மற்றவர்களுக்கு ஒரு சிறப்பான அனுபவம்தான்.

தான் விரும்பியதை அடைய எப்படி சண்டை போட வேண்டும் என்று இவர்களிடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்.

மீனம்

நேர்மை, அன்பு மற்றும் தாராள மனப்பான்மை இவர்களிடம் நிறைந்திருக்கும். இவர்களின் அடிப்படை குணமே அன்பின் மீதுதான் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அதிக உணர்ச்சிவசப்படக்கூடியவராக இருந்தாலும் இவர்கள் தங்களின் உணர்ச்சிகளை பெரும்பாலும் வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

வலியில் இருப்பவர்களுக்கு முதலில் ஓடிச்சென்று உதவுவது இவர்களாகத்தான் இருக்கும்.

காயத்திலிருந்து மீண்டு வருவது எப்படி என்று இந்த உலகம் இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

Bigg Boss Tamil – Season 4 – DAY 10 [14.10.2020] – Video

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

கெட்ட கனவுகளும் நல்ல கனவுகளும் தரும் பலன்கள்…!!

அம்மு

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (06-10-2020)!

அம்மு

கஷ்டங்களை தீர்க்கும் 12 ராசிகளுக்கான வெற்றிலை பரிகாரங்கள்..!!

அம்மு