கொழும்பு தேசிய வைத்தியசாலை கொவிட் பரவல் காரணமாக தற்போது அதிக ஆபத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 400 நோயாளிகள் அங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துகள் காரணமாக அதிகளவு மக்கள் தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்படுகின்றனதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை வைத்தியசாலையின் சுமார் 250 சுகாதார ஊழியர்கள் ஏற்கனவே கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் தாதியர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.