இந்தியா

பெயிண்டரை 6 வருடமாக காதலித்து ரகசியமாக மணந்த கல்லூரி மாணவி! பின்னர் கணவனால் அவருக்கு நேர்ந்த பயங்கரம்

தமிழகத்தில் கல்லூரி மாணவி காதலரை ரகசியமாக திருமணம் செய்த நிலையில், அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, காதல் கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜயவாடாவை சேர்ந்த திவ்யா தேஜேஸ்வினி, அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

பெயிண்டர் வேலை செய்யும் சின்னசாமி என்பவரை மாணவி ஆறு ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளார். இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளனர். மகளின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த திவ்யாவின் பெற்றோர் வீட்டில் இருந்து வெளியில் செல்ல முடியாமல் தடுத்து வைத்துள்ளனர்.

ரகசியமாக செய்து கொண்ட திருமண உறவை திவ்யா முறித்து கொண்டதாக கருதி, அவர் வீட்டுக்கு சென்று சின்னசாமி வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தான் வைத்திருந்த கத்தியை எடுத்து திவ்யாவை சின்னசாமி குத்தியுள்ளார். பின்னர் அதே கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்டு தற்கொலை முயற்சியிலும் சின்னசாமி ஈடுபட்டார்.

இரண்டு பேரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள வீடுகளில் குடியிருக்கும் பொதுமக்கள் ஓடிச்சென்று இரண்டு பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இரண்டு பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள் திவ்யா ஏற்கெனவே இறந்து விட்டதாக அறிவித்தனர். சின்னசாமி தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகிறார்.

ஒருதலைக்காதல் விவகாரத்தில் கத்தியால் சின்னசாமி குத்திக்கொன்றுவிட்டதாக பெண் வீட்டார் தெரிவித்தனர்.

ஆனால், ஏற்கெனவே இருவரும் திருமணம் செய்துவிட்டதாகவும், பெண் வீட்டில் சம்மதிக்காததால் ஏற்பட்ட தகராறில் சின்னசாமி கொலை செய்யும் அளவுக்கு வந்ததாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் விரைவில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

திருமணமான 2 மணி நேரத்தில் மனைவி பற்றி அறிந்து அதிர்ச்சியில் உறைந்த கணவன்! தலைசுற்ற வைக்கும் சம்பவம்

அம்மு

இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய சைக்கிளில் எடுத்துச் சென்ற அவலம்! உதவாத மக்கள்: வைரலாகும் புகைப்படம்

அம்மு

எங்களுக்கு பிள்ளைகள் கொள்ளி வைக்க கூடாது! பரிதாபமாக உயிரிழந்த பெற்றோர் எழுதி வைத்திருந்த கண்ணீர் கடிதம்

அம்மு