உலகம்

இரத்தக்களரியான இளம் தாயாரின் பிறந்தநாள் கொண்டாட்டம்: மகளுடன் மாயமான முன்னாள் கணவன்

பிரேசில் நாட்டில் இளம் தாயாரின் பிறந்தநாள் கொண்டாட்டம் அத்துமீறி நுழைந்த அவரின் முன்னாள் கணவனால் ரத்தக்களரியாக மாறியுள்ளது.

இதில் இருவர் கொல்லப்பட்டதுடன், 2 வயது மகளுடன் அந்த நபர் மாயமாகியுள்ளார்.

பிரேசிலின் Guaianases மாவட்டத்திலேயே இந்த பகீர் சம்பவம் நடந்துள்ளது. 6 வாரங்களுக்கு முன்னர் கருத்துவேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து பிரிந்த நத்தாலியா சல்தான்ஹா, தமது தாயாரின் இல்லத்தில் வைத்து தனது 18-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அப்போது அத்துமீறி நுழைந்த நத்தாலியாவின் முன்னாள் கணவர் 29 வயதான Luis Felipe Correa, கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

இதில் 2 வயது பிள்ளைக்கு தாயாரான நத்தாலியாவும், அவரது தாயாரும் பரித்தாபமாக பலியாகியுள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவத்தை தடுக்க முயன்ற நத்தாலியாவின் தந்தையும் காயங்களுடன் தப்பி, தற்போது சிகிச்சையில் உள்ளார்.

மட்டுமின்றி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட 10 வயது சிறுவன் உட்பட இருவர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், மனைவி பிரிந்து செல்வதை ஏற்க முடியாது என Luis Felipe Correa கூறியதாகவும், அதனாலையே தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

6 வாரங்களுக்கு முன்னரே, நத்தாலியா தமது கணவரை பிரிந்து தாயாரின் இல்லத்திற்கு திரும்பியுள்ளார்.

பல முறை தமது மனைவியிடம் சமரசம் பேச முயன்றும், நத்தாலியாவுக்கும் அவரது குடும்பத்திற்கும் Luis Felipe Correa மீது நம்பிக்கை இல்லை எனவும், இந்த உறவில் விருப்பம் இல்லை எனவும் கூறியுள்ளனர்.

பொலிசார் தற்போது Luis Felipe Correa-ஐ தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் மறைந்திருக்கும் இடத்தை இதுவரை பொலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

நார்வேயில் டயர்களுக்கு காற்றடிக்கும் உயர் அழுத்த பம்பை நண்பனின் ஆசன வாயில் சொருகிய ஐவருக்கு தண்டனை!

அம்மு

மரணதண்டனையின் விளிம்பில் 3 இளைஞர்கள்… பற்றி எரியும் ஈரான்! காப்பாற்ற போராடி வரும் மக்கள்

அம்மு

பிரான்ஸ் தலைநகரில் கட்டுக்கடங்காத வன்முறை… 148 பேர் கைது: எதற்காக தெரியுமா?

அம்மு