உலகம்

இப்படி ஒரு நபரை எனது வாழ்நாளில் சந்தித்ததில்லை: டிரம்பை வறுத்தெடுத்த முன்னாள் வெள்ளை மாளிகை அதிகாரி

வெள்ளை மாளிகையின் முன்னாள் அதிகாரி ஓய்வு பெற்ற ஜெனரல் ஜான் கெல்லி, ஜனாதிபதி டிரம்ப் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துகள் தற்போது தேர்தல் களத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளது.

செய்தி ஊடகம் ஒன்றிற்கு சிறப்பு நேற்காணல் அளித்த ஜெனரல் ஜான் கெல்லி, தமது வாழ்நாளில் ஜனாதிபதி டிரம்ப் போன்று ஒழுக்கமற்ற ஒரு நபரை சந்தித்ததில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வந்த ஜெனரல் ஜான் கெல்லி, பின்னர் வெள்ளை மாளிகையின் முதன்மை அதிகாரிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.

ஆனால், ஜனாதிபதி டிரம்புடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 2018 டிசம்பர் மாதம் ஜெனரல் ஜான் கெல்லி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

டிரம்புடன் வெள்ளை மாளிகையில் பணியாற்றுவது என்பது பரிதாபகரமான செயல் என குறிப்பிட்டிருந்தார் ஜான் கெல்லி.

டிரம்ப் தொடர்பில் பேசிய ஜான் கெல்லி, அவரது நேர்மையின்மையின் ஆழம் என்னை வியக்க வைத்திருக்கிறது என்றார்.

மட்டுமின்றி, டிரம்பின் ஒழுக்கமற்ற செயற்பாடு, ஆட்சியில், அவர் மேற்கொள்ளும் முடிவுகளில் பிரதிபலிப்பதாகவும் ஜெனரல் ஜான் கெல்லி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

அமெரிக்காவில் கருப்பினத்தவர் கொல்லப்பட்டதால் பிரித்தானியா இவ்வாறு செய்ததா? அரசு வெளியிட்ட தகவல்

அம்மு

சீனா சென்றடைந்தனர் உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள்… கொரோனா தொற்று உருவானது குறித்து ஆய்வு!

அம்மு

தனது முன்னாள் காதலி வேறொரு நபருடன் இருப்பதைக் கண்ட துறவி: தன்னிலை மறந்து செய்த பயங்கர செயல்!

அம்மு