செய்தி

நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் சுகாதாரத்துறை

அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்களின் எண்ணிக்கையை சுகாதாரத்துறையினர் நிர்ணயம் செய்வார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பிராந்திய சுகாதார அதிகாரிகளின் பணிப்புரைகளுக்கு அமைய தொழிற்சாலைகள் உள்ளிட்ட நிறுவனங்களில் எத்தனை பணியாளர்களை கடமையில் ஈடுபடுத்த முடியும் என்பது குறித்து நிர்ணயிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய்த்தொற்று நிலைமையினால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பணியிடங்களுக்கு வருகை தரும் பணியாளர்களின் உடல் வெப்ப நிலை கட்டாயமாக பரிசோதனை செய்யப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கை கழுவுவதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட ஏனைய சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் மேலும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

கருப்பு பட்டியுடன் நாடாளுமன்றில் சஜித் அணி

அம்மு

யாழில் இளைஞன் மீது யுவதி அதிரடி நடவடிக்கை! பின்னர் நடந்த விபரீதம்

அம்மு

யாழில் தென்னிந்திய நடிகைக்காக தீயில் எரிந்த யுவதி தற்கொலை

அம்மு