செய்தி

20 தற்கொலைத் தாக்குதல்களை நடாத்த திட்டமிட்டிருந்த சஹ்ரான் குழு

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சஹ்ரான் ஹாசீம் தலைமையிலான குழு 20 தற்கொலைத் தாக்குதல்களை நடாத்த திட்டமிட்டிருந்தது என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

20 தற்கொலைப் குண்டுதாரிகளை கொண்டு இந்த தாக்குதல்களை நடாத்த திட்டமிடப்பட்டிருந்ததாக உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடாத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

முதல் தாக்குதல்களின் பின்னர் மூன்று கட்டங்களாக தொடர் தாக்குதல்களை நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.

சஹ்ரான் குழுவின் பிரதிநிதியொருவரிடம் நடாத்திய விசாரணைகளின் மூலம் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் சாட்சியமளித்த பொலிஸ் உத்தியோகத்தர் இந்த தகவல்களை ஆணைக்குழுவின் எதிரில் தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த இயக்கத்தின் தலைமைப் பதவி தொடர்பில் சஹ்ரானுக்கும் நவுபர் மௌவி என்பவருக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை காணப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

மாகாணசபைகளை ஒழிக்க முடியாவிட்டால் மன்னர் ஆட்சிமுறைதான்: சரத் வீரசேகர!

அம்மு

மீண்டும் வேறு இடத்துக்கு இடம்பெயரும் திருநெல்வேலி பொதுச்சந்தை

அம்மு

உரிமையைப் பெறுவதற்கான போராட்டம் தொடரவேண்டுமானால் கூட்டமைப்பிற்கு வாக்களியுங்கள் – உதயகுமார்

அம்மு