செய்தி

முதலாவது பதவி ஆண்டுக்கு முன்னர் புதிய அரசமைப்பு; கோட்டாபய அதிரடி அறிவிப்பு

தனது முதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

19ஆவது திருத்தத்தை வைத்துக்கொண்டு தன்னால் எதனையும் செய்யமுடியாது என்று குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, கூடிய விரைவில் 20ஆவது திருத்த யோசனையை நிறைவேற்றிவிட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் 20ஆவது திருத்த யோசனை மற்றும் புதிய அரசியலமைப்புப் பணிகள் குறித்து ஆளுங்கட்சி உறுப்பினர்களைத் தெளிவுபடுத்துகின்ற சந்திப்பொன்றை ஜனாதிபதி தனது செயலகத்தில் நடத்தினார்.

இந்த சந்திப்பில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் பங்காளிகளாக செயற்பட்டுவருகின்ற அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி, அராஜகத்தை எதிர்க்கின்ற மற்றும் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்கின்ற வகையிலான புதிய அரசியலமைப்பிற்கான தேவையை தெளிவுபடுத்தினார்.

குறிப்பாக தற்சமயம் அமுலில் உள்ள 19ஆவது திருத்தத்தினால் தனது கைகள் கட்டப்பட்டிருப்பதாகவும், அதனால் 20ஆவது திருத்த யோசனையை முடிந்தளவில் நிறைவேற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு தனது இரண்டாவது பதவியாண்டு ஆரம்பிக்கும் திகதியான வரும் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பினை சமர்பிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

தனிமையில் வசித்து வந்த முதியவரின் உயிரிழப்புக்கு காரணமான இரு இளைஞர்கள் யாழில் சிக்கினர்

அம்மு

சந்தேக நபர் உயிரிழப்பு; இரு பொலிஸார் பணிநீக்கம்

அம்மு

தமிழகத்தில் இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் இடம்பெற்ற செயல்! வெளியான திடுக்கிடும் தகவல்கள்

அம்மு