சினிமா

SPB நினைவாக உருவாகும் முக்கிய அடையாளம்! களத்தில் மகன் மற்றும் சகோதரி ஷைலஜா

கோவை சிறுதுளி அலுவலக வளாகத்தில் எஸ்.பி.பி. வனம் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் பிறந்தநாளன்று (அக்டோபர் 15) சிறுதுளி அமைப்பின் சார்பில், ஆண்டுதோறும் மரக்கன்று நடுவது வழக்கம். நடப்பாண்டு கூடுலாக, சமீபத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நினைவாக எஸ்.பி.பி. வனம் உருவாக்க முடிவுசெய்தனர்.

அதன்படி, கோவை வாலாங் குளம் அருகே உள்ள சிறுதுளி அலுவலக வளாகத்தில், மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண், சகோதரி எஸ்.பி.சைலஜா ஆகியோர் காணொலி வாயிலாக மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கிவைத்தனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாடகர் ஸ்ரீநிவாஸ் ஆகியோரும் காணொலி காட்சியில் பங்கேற்று பேசினரச்ர்நிகழ்ச்சியில் சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மெல்லிசைப் பாடகர் சி.ஜி.குமார் உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் இசையஞ்சலி செலுத்தினர்.

மேலும் கோவை மத்திய சிறை வளாகத்தில் எஸ்.பி.பி.யின் வயதை குறிக்கும் வகையில் 74 மரங்களை உள்ளடக்கிய ‘இசை வனம்’ அமைத்து, புல்லாங்குழல் தரும் மூங்கில், சந்தனம், செங்காலி, கருங்காலி மரங்களும்,வீணை, தவில், தபேலா, மிருதங் கம், கஜூரா, உடுக்கை, ஹார்மோனியம் தரும் தேக்கு மரமும், நாதஸ்வரம் தயாரிக்க பயன்படும் ஆச்சார மரமும் நட்டு, சிறைக் கைதிகள் மூலம் பராமரிக்க திட்டமிடப்பட்டது.

ஆனால் தங்களின் திட்டத்திற்கு சிறை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை என சிறுதுளி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Cinema News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Cinema News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

பிக்பாஸ் ஓவியாவின் ட்வீட்! குழப்பத்தில் ரசிகர்கள் – அப்படியென்ன இதில்

அம்மு

நடிகையான பின் லாஸ்லியா சேர்த்த சொத்து – மூன்று படங்களில் இவ்வளவு சம்பளமா!!

அம்மு

பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் போதே சாதி என்ன என்று கேட்கும் பிரபலம்- யார் கேட்டது, எழும் பிரச்சனை

அம்மு