உலகம்

அமெரிக்காவில் 70 ஆண்டுகளில் முதன்முறையாக மரண தண்டனை விதிக்கப்படும் முதல் பெண் இவர் தான்!

அமெரிக்காவில் 1953ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட உள்ளது.

Lisa Montgomery (43) என்ற பெண் தான் கர்ப்பமடையாதததால், கர்ப்பிணியான Bobbie Jo Stinnett (23) என்ற கர்ப்பிணிப்பெண்ணை கழுத்தை நெறித்துக் கொலை செய்து அவரது வயிற்றை வெட்டி, அவரது கருவிலிருந்த குழந்தையை திருடிக்கொண்டார்.

திருடிய குழந்தையை தன் வீட்டுக்கு கொண்டு சென்று தன் குழந்தைபோல் காட்டிக்கொண்ட Lisaவை பொலிசார் கைது செய்தார்கள். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவரிடமிருந்த குழந்தை மீட்கப்பட்டு Bobbieயின் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டது. Victoria Jo Stinnett என்னும் அந்த குழந்தைக்கு இப்போது 16 வயதாகிறது.

இந்நிலையில், Lisaவுக்கு டிசம்பர் மாதம் 8ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

விஷ ஊசி போட்டு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. 1953ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அரசு பெண்கள் யாருக்கும் மரண தண்டனை விதிக்கவில்லை.

ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தததும் 17 ஆண்டுகளாக மரண தண்டனைகள் நிறைவேற்றப்படாமல் இருந்த நிலைமையை முடிவுக்கு கொண்டுவந்தார்.

ஜூலைக்குப் பின் ஏழு கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இப்போது, 70 ஆண்டுகளில் முதன்முறையாக அமெரிக்காவில் ஒரு பெண்ணுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

World News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

World News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

கருப்பினத்தவருக்கு ஆதரவான போராட்டம்: ஒட்டுமொத்த மக்களின் கவனத்தை ஈர்த்த அந்த ஒரு புகைப்படம்

அம்மு

பிரித்தானியாவில் உயிருக்கு போராடும் 11 வயது சிறுவன்! உயிரிழந்த நண்பன்: துயர சம்பவத்தின் பின்னணி

அம்மு

திடீரென்று மாயமான வடகொரிய தலைவரின் சகோதரி கிம் யோ: தாய்மாமனுக்கு நேர்ந்த கதி ஏற்படும் என அச்சம்!

அம்மு