இந்தியா

வேலை செய்யும் வீட்டிலேயே தூக்கில் சடலமாக தொங்கிய 18 வயது பணிப்பெண்

இந்தியாவில் வீட்டு வேலை செய்யும் பணிப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சண்டிகரை சேர்ந்தவர் அஞ்சு (18). இவர் வீட்டு வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் தான் பணிபுரியும் ஒரு வீட்டில் இரவு நேரத்தில் அஞ்சு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அந்த வீட்டின் உரிமையாளர்கள் அஞ்சுவை அடித்து கொடுமைப்படுத்தியதாலும், வீட்டு அனுப்ப மறுத்ததாலும் அவர் தற்கொலை செய்து கொண்டார் என குடும்பத்தார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பொலிசார் கூறுகையில், சம்பவத்தன்று வீட்டு உரிமையாளர்கள் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு நள்ளிரவு வந்துள்ளனர், அப்போது பணிப்பெண் அஞ்சு அங்கு தான் இருந்திருக்கிறார்.

காலையில் அவர்கள் தூங்கி எழுந்த போது அஞ்சு தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்துவிட்டு எங்களுக்கு தகவல் கொடுத்தனர்.

அஞ்சு எழுதிய கடிதம் எதுவும் கிடைக்கவில்லை, அவர் குடும்பத்தார் புகார் கொடுத்துள்ளனர், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

World News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

World News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

காசி கழற்றிவிடும் பெண்களை தன் வலையில் வீழ்த்திய அவன் நண்பனான வசதிபடைத்த தினேஷ்! வெளியான புதிய அதிர்ச்சி தகவல்

அம்மு

15 வயதில் முதல் திருமணம்! தற்போது 17 வயதில் இரண்டாம் திருமணம் செய்த சிறுமி… தலைசுற்ற வைக்கும் சம்பவத்தின் பின்னணி

அம்மு

மணப்பெண்ணுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து அவரை மணந்த மாப்பிள்ளை! திருமணமான 10 நாளில் காத்திருந்த அதிர்ச்சி

அம்மு