செய்தி

முரளிதரன் பேசிய பல வார்த்தைகளே உலகளவில் அவருக்கு எதிராக தமிழர்கள் மாற காரணம்!

முத்தையா முரளிதரன் ஒரு தமிழராக இருந்து இலங்கை தேசிய அணியில் இடம்பெற்று இந்தளவு சாதனை வீரராக உருவாகுவதென்றால் கட்டாயமாக இலங்கை அரசை அனுசரித்து ஆதரவளித்து செல்லாமல் அது சாத்தியமாகாது.

ஒரு இலங்கை தமிழராக இருந்து இந்தளவு கிரிக்கெட் உலகில் சாதனை வீரராக வருவதென்பது சாதாரண விடையமில்லை. இதை அடைய அவர் சந்தித்த சோதனைகள் குறைவானதும் இல்லை.

ஆனால் தனது துறையை தாண்டி அரசை ஆதரித்தாலும் அவர் ஆதரிக்க தேர்ந்தெடுத்த அரசு எது என்பதிலேயே சிக்கல்கள் உருவாகின.

அந்த அரசு, சர்வதேச ரீதியில் பிரபல்யமான இலங்கை தமிழரை கொண்டே சர்வதேசத்தில் தமிழருக்கெதிராக செயல்பட்ட அரசின் குறைகளை நிவர்த்தி செய்ய போடப்பட்ட சதிவலையில் சிக்குண்டார் இவரும்.

இதனால் முரளிதரனால் உதிர்க்கப்பட்ட பல வார்த்தைகளே உலகளவில் முரளிக்கு எதிராக தமிழர்கள் மாற காரணமாக அமைந்தன.

அரசுக்கு சார்பாக இருந்திருந்தாலும் பல இடங்களில் புத்திசாலித்தனமாக பேசி இருக்கலாம்.

எனக்கும் பிடித்த அணி இலங்கை அணி தமிழன் எனும் ரீதியில் முரளிமீது பற்று அதிகம்.

799 விக்கெட்டுக்கள் எடுத்தும் அந்த டெஸ்ட் போட்டி முடியும் தருவாயில் உள்ளபோது 800 விக்கெட்டுக்களை எப்படியும் எடுக்கவேண்டும் என்று மனம் பட்ட பாடு நமக்குத்தான் தெரியும்.

இருந்தும் ஒரு பேட்டியில் பத்து பதினைந்து தாய்மார்கள் வந்து அழுவதால் காணாமல் ஆக்கப்பட்டார் என்று நம்பலாமா என்று கேப்பதை பார்க்கும் போது நிச்சையம் தமிழ் உணர்வாளர்களுக்கு மனநெருடல் வராமல் இருக்காது.

விளையாட்டை தாண்டி அரசியல் சூழ்ச்சிகள் தெரியாமல் வெளியிட்ட வார்த்தைகளால் இன்று தமிழினம் கிரிக்கெட் உலகில், வேதனைகள் பலவற்றை தகர்த்து சாதனை படைத்த ஒரு தமிழனை கொண்டாடமுடியாத துர்ப்பாக்கிய நிலையில் கொண்டுவந்து விட்டுள்ளது.

திரைப்படம் 800 வெளிவருமா இல்லை வெளிவராதா என்பது இன்னமும் கேள்விக்குறி அப்படி வெளிவந்து அதில் தமிழருக்கெதிராகவும் தமிழர் போராட்டத்தை குறைத்து கூறுவது போலவும் ஏதும் இருப்பின் முரளியின் நிலை இன்னமும் பரிதாபமாக்கலாம். இல்லை,

படம் வெளிவருவதானால் முரளி இப்பவே சுதாகரிச்சுக்கொண்டு படத்தில் ஏதும் தமிழருக்கெதிரான காட்சிகள் இருந்தால் அதனை நீக்கி முரளியின் சாதனை பயணத்தை மட்டும் வெளிக்காட்டும் காட்சி அமைப்புக்களோடு படத்தை வெளியிட்டால் சற்று ஆறுதலாக அமைவதோடு ஒரு இலங்கை சாதனை தமிழனை உலகம் போற்றும்வகையாகவும் அமையும்.

திரைப்படம் வெளிவருவதானால் முரளி ஆக்கப்படும் காட்சிகளில் கவனம் செலுத்தி மக்கள் குரல்களுக்கு செவிசாய்த்து தமிழர் உணர்வுகளுக்கு பாதகம் இல்லாமல் வெளிவந்தால் சந்தோசம்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

பேருந்து கட்டணங்களை முற்கொடுப்பனவு அட்டைகளின் மூலம் அறவீடு செய்யத் திட்டம்

அம்மு

அரச அதிகாரிகள் இந்த தவறைச் செய்தால் என்ன தண்டனை தெரியுமா

அம்மு

பூரண ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழையுங்கள்: சுமந்திரன் எம்.பி. அழைப்பு

அம்மு