செய்தி

முரளிதரனின் படத்தை நடிக்க மறுத்து துாக்கி எறிந்த நடிகர் ரீஜே அருணாச்சலம்; குவியும் பாராட்டு

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் இளவயது முரளிதரனாக நடிக்க படக்குழு என்னிடம் கேட்டது.

எனது தாய் ஈழத்தில் பிறந்தவராதலால் அவர்கள் சொன்ன கதையில் சரியான அரசியல் இல்லை என நான் உணர்ந்தேன்.

ஆதலால் அப்படத்தில் நடிக்க நான் மறுத்தேன் என்று தெரிவித்திருக்கிறார் அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இளம் நடிகரும், பாடகருமான ரீஜே அருணாச்சலம்.

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரீஜே அப்படத்தில் நடிக்க மறுப்புத் தெரிவித்ததற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

நான் இந்தியாவில் இருந்த போது ‘800’ படக்குழு என்னை அணுகியது. நான் அவர்களின் அலுவலகத்திற்குச் சென்று கதையின் சில பகுதிகளைக் கேட்டேன். எனக்கு இளவயது முரளிதரனாக நடிக்க வாய்ப்பளிக்கப்பட்டது.

எனினும், ஈழத்தமிழர் பிரச்சினை பற்றிய சரியான அணுகுமுறை இப்படத்தில் இல்லை என எனக்குத் தோன்றியது. எனது தாய் ஈழத்தில் பிறந்தவர்.

ஆதலால் அந்த கதையின் பட அரசியலுக்குள் புகுந்து கொள்ள நான் விரும்பவில்லை. அதனால் மறுப்புத் தெரிவித்தேன் என்றுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

பிரபாகரனுடன் நேரடி சந்திப்பிற்கு மஹிந்த விரும்பினார்: சொல்ஹெய்ம் தகவல்!

அம்மு

வாக்கெண்ணும் மையத்திற்கு சென்ற சுமந்திரனுக்கு எதிர்ப்பு: அதிரடிப்படை தாக்குதல்; மாவையின் மகன் மீதும் தாக்குதல்!

அம்மு

மகன் ஜீவன் தொண்டமானிடம் இறப்பதற்கு முன் அமரர் ஆறுமுகன் தொண்டமான் கூறியது

அம்மு