செய்தி

நீதிமன்றிற்கு அருகாமையில் வந்து சென்றாரா ரிசாட் பதியூதீன்?

குற்ற விசாரணைப் பிரிவினரால் இதுவரையில் கைது செய்ய முடியாதுள்ள முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன், சில நாட்களுக்கு முன்னர் நீதிமன்றிற்கு அருகாமையில் வந்து சென்றுள்ளார்.

தம்மை கைது செய்வதனை தடுக்கக் கோரி நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்வதற்கான ஆவணத்தில் கையொப்பமிடுவதற்காக ரிசாட், சட்டத்தரணி காரியாலயமொன்றுக்கு சென்றிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

தாம் கைது செய்யப்படுவதனை தடுக்குமாறு கோரி சட்டத்தரணிகள் ஊடாக ரிசாட் தாக்கல் செய்த ரீட் மனு கடந்த 15ம் திகதி தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தல் மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை ஆகிய குற்றச்சாட்டின் அடிப்படையில் ரிசாட்டை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் வழங்கியுள்ளார்.

ரிசாட்டை கைது செய்யும் நோக்கில் குற்ற விசாரணைப் பிரிவினர் சில காவல்துறை குழுக்களை ஈடுபடுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

மற்றுமொரு பல்கலைக்கழக மாணவிக்கும் கொரோனா தொற்று

அம்மு

கஜேந்திரர்களின் முன்னணிக்குள் உக்கிரமடையும் அணி மோதல்: விரைவில் சிலர் OUT

அம்மு

கொரோனா அச்சம்! சிறைச்சாலைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

அம்மு