மறைந்த பாடகர் எஸ்பிபியை கடைசியாக சந்தித்தது குறித்தும் அவருடனான நினைவலைகள் குறித்தும் பாடகர் மனோ பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்திய திரையுலகின் முன்னணி பாடகரான எஸ்பிபி கடந்த மாதம் 25ஆம் திகதி காலமானார். அவரின் சடலம் தாமரைபாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அடக்கத்துக்கு முன்னர் அவரின் உடலை பார்த்து பாடகர் மனோ கதறி அழுதார்.
இந்த வீடியோ காட்சி அப்போது வெளியாகி காண்போர் மனதை கலங்கடித்தது. அந்தளவுக்கு எஸ்பிபியுடன் நெருக்கமாக இருந்தவர் மனோ.
அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், எஸ்பிபி இசைத்துறையில் செய்யாத சாதனைகளே கிடையாது. நானும் அவரும் அண்ணன், தம்பி போல இருந்தோம்.
கடந்த ஜூலை 16ஆம் திகதி தான் அவரை கடைசியாக நான் சந்தித்தேன், அப்போது என்னிடம் நிறைய பேசினார் என கூறினார்.
அப்போது பேட்டி எடுப்பவர் மனோவிடம், சமூகவலைதளங்களில் ஒரு தகவல் வெளிவந்தது. அதாவது, தொண்டையில் எஸ்பிபிக்கு ஆப்ரேஷன் செய்த போது குரலா உயிரா என ஒரு சூழல் வந்த போது குரல் இல்லாமல் நான் இருந்து என்ன செய்ய போகிறேன் என எஸ்பிபி கூறியதாக கூறப்படுகிறது, இது உண்மையா என கேட்டார்.
அதற்கு பதிலளித்த மனோ, அது பற்றி நான் கேள்விப்படவில்லை, ஆனால் அவர் எப்படியிருந்தாலும் பாடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.
ஏற்கனவே அவருக்கு சில வருடங்களுக்கு முன்னர் குரல்வளை அதிர்வு நாளங்களில் ஆப்ரேஷன் செய்யப்பட்டது.
அவரின் உயிரற்ற உடலை பார்க்கும் போது, இனி அண்ணனை பார்க்க முடியாதே என தோன்றியது, இவர் இனி இல்லை என்பதை தாங்கி கொள்ளவே முடியவில்லை என தழுதழுத்த குரலில் கண்ணீருடன் கூறியுள்ளார்.
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.
Srilanka News Facebook :- Liked
Facebook Group :- Joined
Srilanka News Viber Group :- Joined
News Papers Group :- Joined
மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.