20 May 2022
Image default
இலங்கை

இலங்கையில் அமைந்துள்ள ஒரு பகுதிக்கு சின்மயா ஒழுங்கை என பெயர் மாற்றம்!

இலங்கை சின்மயா மிசன் அமைந்துள்ள கொள்ளுப்பிட்டி பத்தாவது ஒழுங்கையின் ஒரு பகுதியை ‘சின்மயா ஒழுங்கை” என அதி விசேட வர்த்தமானி மூலம் கொழும்பு மாநகரசபை ஆணையாளர் சட்டத்தரணி ரோஷி செனநாயக்க பெயரை மாற்றியுள்ளார்.

மாநகரசபை உறுப்பினர் காயத்ரி விக்கிரமசிங்கவின் தொடர்ச்சியான முயற்சிகளின் பலனாக கொழும்பு மாநகரசபை இதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டது. காயத்ரி சின்மயா மிசனின் செயற்பாடுகள் மீது சிறு வயதில் இருந்தே தீவிர ஆர்வமும் அர்ப்பணிப்பும் கொண்டவர்.

அவர் கொள்ளுப்பிட்டி பத்தாவது ஒழுங்கையில் வீடுவீடாகச் சென்று பூஜ்சிய குருதேவ் சுவாமி சின்னமயானந்தஜியின் மகிமைகள் குறித்து அனைத்து மதங்களை சேர்ந்த மக்களிற்கும் தெளிவுபடுத்தியதுடன் பெயர் மாற்றத்திற்கான அவர்களின் ஆதரவை நேரடியாகப் பெற்றுக்கொண்டார்.

இந்த பெயர் மாற்றத்திற்கான செயல் திட்ட அறிக்கையை மாநகரசபையில் சமர்ப்பித்ததோடு இதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டதுடன் அரச திணைக்களங்களுடனும் மேல் மாகாண ஆளுநர் அலுவலகத்துடனும் நேரடி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு குறுகிய காலத்தில் இப்பணியை நிறைவு செய்துள்ளார்.

சின்மயா மிசன் இலங்கைத் தலைவர் எஸ். மகேந்திரன் – வதிவிட ஆச்சர்யா சுவாமி குணாதீத்தானந்த ஜியும் நிறைவேற்று குழு உறுப்பினர்களும் ‘சின்மய ஒழுங்கை” பெயர் மாற்றத்திற்காக காயத்ரியை பாராட்டியுள்ளனர்.

இந்த பெயர் மாற்றத்தினை குறுகிய காலத்தில் சாத்தியமாக்கிய காயத்ரி தனது பன்னிரண்டாவது வயதில் சின்மயா பாலவிகாரில் இணைந்து கொண்டவர். பின்னர் இலங்கை சின்மய மிசனின் ஆச்சார்யாவாக சுவாமி ரமண சைதன்ய பணியாற்றியவேளை சின்மயா யுககேந்திரவிலும் இணைந்து அவரிடம் வேதாசாஸ்திரங்களையும் சமஸ்கிருத சுலோகங்களையும் கற்றவர்.

அது மாத்திரமில்லாமல் அவர் யுவகேந்திரவில் இணைந்திருந்த காலத்தில் பல ஆன்மீக இளைஞர் முகாம்களிலும் பஜன் சந்தியா போன்ற புனித நிகழ்வுகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்றவர். இன்றும் அவர் சின்மயா மிசன் சேதுகாரி அமைப்பில் தொடர்ந்து ஆர்வத்துடன் பங்கெடுத்து வருகின்றார்.

1980 இல் குருதேவ் சின்மயானந்தஜி ரம்பொடவில் ஆன ;மீக நிலையமொன்றை ஏற்படுத்துவதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார்.

ஸ்ரீ டி. ஈஸ்வரனின் தலைமையின் கீழ் அவரும் இலங்கை சின்மயா மிசன் ஏனைய பக்தர்களும் ஆஞ்சநேயர் ஆலயமொன்றை அங்கு எழுப்பினார்கள். கொத்மலை அணையை பார்த்தபடி மிகவும் அழகான பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயம் மிகப்பெரிய தலமாக இன்று மாறியுள்ளது. இங்கு பதினாறு அடி உயரமான ஸ்ரீ ஹனுமான் மூல மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

காயத்ரி கொழும்பு பல்கலைக்கழகத்தில் அரசியல் பட்டப்படிப்பையும் காமராஜ் பல்கலைக்கழகத்தில் தத்துவம் மற்றும் ஒப்பீட்டு ஆன்மீகம் ஆகியவற்றில் பட்ட மேற்படிப்பையும் மேற்கொண்டவர்.

முன்னாள் சின்மயா மிசன் உலகளாவிய தலைவர் சுவாமி தேஜாமயானந்தா தற்போதைய சின்மயா மிசன் உலகளாவிய தலைவர் சுவாமி ஸ்வரூபானந்தா ஆகியோரின் அன்புக்கும் அருளுக்குமம் பாத்திரமான காயத்ரி தென் அமெரிக்காவின் குவாதொலூப் நகரில் இடம்பெற்ற வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களிற்கான இளைஞர் மாநாட்டில் உரையாற்றுவதற்காக காயத்ரி அழைக்கப்பட்டிருந்தார்.

அங்கு சமூக அபிவிருத்தி பணிகளுக்காக இவருக்கு ‘மகாத்மாகாந்தி விருது” வழங்கப்பட்டது. இந்தியாவை அறிவோம் திட்டத்திற்காக நிகழ்ச்சித் திட்டத்திற்காக முன்னாள் அமைச்சர் வயலாரவி அவர்களின் சிறப்பு விருந்தினராக பங்குபற்றிய இவர் தனது அனுபவங்கள் குறித்து எழுதிய கட்டுரையை கொழும்பு இந்திய தூதரகம் தனது சஞ்சிகையான சந்தோசில் வெளியிட்டிருந்தது.

அக்கட்டுரை இந்தியாவில் ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

Related posts

புதிதாக 1,223 பேருக்கு கொரோனா தொற்றுறுதி

SudarSeithy

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பில் வெளியான தகவல்

SudarSeithy

அரசாங்கத்திற்கு எதிராக களமிறங்கிய எஸ்.பி. திஸாநாயக்க

SudarSeithy