14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி வெளியிட்ட தகவல்!

கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இலங்கையில் நேற்றைய தினத்தில் 310,768 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி (Pavithra Wanniarachchi ) தெரிவித்துள்ளார்.

அத்துடன் நேற்றைய தினத்தில் (31) மாத்திரம் 306,507 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 20,100 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 385,885 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை 159,081 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் 14,503 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது. அதேபோல், இதுவரை 201,495 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில், 713,659 பேருக்கு மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எதிர்காலத்தில் நாடு மேலும் பாதிக்கப்படுவதை தடுக்க முடியாது – ரோஷி சேனாநாயக்க

SudarSeithy

கனடாவுக்கு கனவுகளுடன் சென்ற இலங்கை பெண்ணின் துயர முடிவு

SudarSeithy

ஒரு வாரத்திற்கு நாட்டை முடக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

SudarSeithy