ரஸ்ய நாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்னதாக இடைநிறுத்தப்பட்ட ரஸ்ய – இலங்கை விமான சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று நேற்று மொஸ்கோவிலிருந்து இந்தப் பயணத்தை ஆரம்பித்திருந்தது.
யூ.எல். 534 ரக விமானமொன்றின் மூலம் ரஸ்ய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
ஒவ்வொரு வாரத்திலும் ரஸ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையில் விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.