செய்தி

நாடு முழுவதிலும் உள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு கோரிக்கை

நாடு முழுவதிலும் உள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூட வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவுகையை அதிகரிக்கக் கூடிய அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை உறுதி செய்ய மதுபான விற்பனை நிலையங்களை மூடுவது மிகவும் பொருத்தமானது என சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று சமூகத் தொற்றாக பரவியுள்ளதா என்பதனை உறுதியாக கூறுமளவிற்கு புள்ளிவிபரத் தகவல்கள் தங்களிடம் இல்லை எனவும், தொற்று நோயியல் தடுப்புப் பிரிவு தகவல்களை பகிர்ந்து கொள்வதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

முக்கியமான தொழில்நுட்ப புள்ளிவிபரங்களை வழங்காமையின் பொறுப்பினை தொற்று நோயியல் தடுப்புப் பிரிவு ஏற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்று பரவுகையை எந்தவொரு தரப்பும் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார ஸ்தாபனம் கோரியுள்ளதாக தெரிவித்துள்ளது.

நாள் ஒன்றுக்கு 10000 பீ.சீ.ஆர் பரிசோதனைகளை நடாத்துதல், ஆபத்து நிலையில் இல்லாதவர்களை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தல், மக்கள் சுகாதார பழக்கவழக்கங்களை பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதன் மூலம் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்

அம்மு

அதிகரித்து வரும் எலி காய்ச்சல் – கண்டியில் இரண்டு பேர் உயிரிழப்பு

அம்மு

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை ரத்து செய்ய வேண்டாம்! முன்னாள் சபாநாயகர் கோரிக்கை

அம்மு