செய்தி

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்க விவகாரம்! பிரித்தானிய அரசிடம் சிறீதரன் விடுத்துள்ள கோரிக்கை

விடுதலைப் புலிகளின் கொள்கைகளும், எண்ணங்களும் நேர்மையான வழியில் இருந்தது என்பதை ஏற்று, தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான, கௌரவமான தீர்வை இலங்கை அரசாங்கம் முன்வைப்பதற்கான அழுத்தத்தை பிரித்தானியா கொடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் விடுதலைக்காகப் போராடிய மிக வல்லமை கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது, சர்வதேச நாடுகள் விதித்த தடையே அந்த அமைப்பு 2009 இல் அழிக்கப்படக் காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறானது என பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

தற்போதைய பிரித்தானியாவின் நிலைப்பாட்டை தமிழர் என்ற வகையில் வரவேற்கிறேன். இருப்பினும் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதால் தமிழர்களின் உரிமைகள் இல்லாது செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் மீதான உரிமைகள் தொடர்ந்தும் நசுக்கப்பட்டு வரும் நிலையில், விடுதலைப் புலிகள் தவறிழைக்கவில்லை என்ற வகையிலான பிரித்தானிய நீதிமன்றத் தீர்ப்பு, அந்நாட்டு அரசாங்கத்துக்கு ஒரு செய்தியை விடுத்துள்ளது.

இந்நிலையில், பிரித்தானிய ஆணைக்குழுவின் தீர்ப்பை மதித்து, விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானிய அரசாங்கம் நீக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

கடுமையான கட்டுப்பாடுகளுடன் 3 மாதங்களின் பின் ஆரம்பமாகும் பாடசாலைகள்

அம்மு

கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளில் அமுல் செய்யப்பட்டு வரும் ஊரடங்கு சட்டம் தொடர்பில் முக்கிய அறிவித்தல்

அம்மு

யாழில் உணவகங்கள், விடுதிகளை மீள திறக்க அனுமதி! விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை

அம்மு