செய்தி

மீன்களின் உடலில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) வாழும்?

மீன்களின் உடலில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) எந்தளவு காலம் உயிருடன் வாழும் என்பது தொடர்பில் உறுதியாக கூற முடியாது என தேசிய தொற்று நோயியல் பிரிவின் பிரதம வைத்தியர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) ஏதேனும் உடலில் குறிப்பிடதக்க காலம் வாழும் தன்மையை கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

´வூஹானில் மீன் விற்பனை நிலையம் ஒன்றில் இருந்தே இந்த வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டது. உறுதியாக இதனை கூற முடியாவிடினும் மீன்களில் இருந்து இந்த வைரல் பரவி இருக்குமானால். மனிதர்களிடத்தில் எவ்வாறு அது வியாபித்தது என்பது தொடர்பில் கண்டறிய வேண்டும். இதனை காரணமாகக் கொண்டு மீன்களை உணவுக்காக எடுத்துக் கொள்வதால் எந்த பிரச்சினையும் இல்லை. முறையாக சுகாதார வழிமுறைகளை கைக் கொண்டால் எந்த பிரச்சினையும் இல்லை. சமைப்பதற்காக மீன்களை தொட்ட பின்னர் நன்றாக கைகளை சவர்க்காரம் இட்டு கழுவ வேண்டும். அத்துடன் அதே கைகளில் முகத்தை தொடுவதை தவிக்கவும். இவ்வாறு செய்தால் சில வேளைகளில் மீன்களின் உடலில் கொவிட் வைரஸ் இருந்தால் அதில் இருந்து பாதுகாப்பு பெறலாம். மீன்களை உணவாக உற்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்´ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

அமெரிக்க இராஜாங்க செயலாளர் வருகை; கொழும்பில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்!

அம்மு

இலங்கையில் 1800 மில்லியன் ரூபாய் பணத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட வங்கி கணக்கு

அம்மு

ஆபத்தான இரு வாரங்கள் – கொழும்பு மக்களின் பொறுப்பற்ற செயல்! CCTV மூலம் கண்காணிப்பு

அம்மு