டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இலங்கை வீராங்கனை பற்றி சமூக வலைத்தளங்களில் விமர்சனம் குவிந்து வருகின்றன.
நிமாலி நியனாராச்சி எனும் குறித்த வீராங்கனை 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்றார். இதன்போது அவர் தனது போட்டி இலக்கத்தை அவர் பின் ஒன்றின் மூலம் கட்டி தொங்கவிட்டு காட்சிப்படுத்தியுள்ளமை தொடர்பிலேயே விமர்சனம் எழுந்துள்ளது.
நிமாலி லியனாரச்சி தனது போட்டி இலக்கங்களை பூட்டூசியின் மூலம் பிணைத்து ஓடியமை குறிப்பாக சிங்கள மொழி சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களுடன் வைரலாகி வருகிறது.
இதேவேளை போட்டியில் பங்குபற்றிய அனைத்து போட்டியாளர்களுமே இவ்வாறு போட்டி இலக்கங்களை பூட்டூசியின் மூலம் பிணைத்து ஓடியுள்ளனர். ஆனால் சிங்கள ஊடகங்கள் இதனை தவறாக சித்தரித்து பதிவிட்டுள்ளனர்.
எமது நாட்டில் பின்தங்கிய பாடசாலைகளில் சிறுவர்களின் இல்ல விளையாட்டுப் போட்டிகளில் இலக்கத்தை ஒட்டி ஓட்டப் போட்டியில் பங்குபற்றுவது உண்டு. இந்நிலையில் ஒலிம்பிக்கில் பங்கு பற்றிய நிமாலி நியனாராச்சி பின் குத்தி ஓடிய சம்பவம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.