எதிர்காலத்தில் கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் அரசின் மீதான நம்பிக்கையை அதிகரித்து அதனூடாக ஆட்சியமைக்கக் கூடிய மிகப் பலம்வாய்ந்த கட்சியாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ( பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
நேற்று திருகோணமலைக்கு விஜயம் செய்து மாவட்டத்தின் பரவலான பகுதிகளில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சிறிய கூட்டங்களில் பங்கேற்றிருந்தார்.
குறித்த சந்திப்பின் இறுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
எதிர்காலத்தில் ஆட்சி அமைக்கப்படும் போது பலம்வாய்ந்த தமது கட்சியின் தலைமையில் கிழக்கில் ஆட்சியமைக்கப்பட வேண்டும் எனும் தூர நோக்கில் தாம் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.