செய்தி

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! இன்று மாலை பதிவாகியுள்ள நிலவரம்

இலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

அதன்படி இன்று மாலை 6 மணிக்கு பதிவாகியுள்ள நிலவரத்தின் படி மேலும் 293 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதில் 291 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் நெருங்கிய இணைப்பில் இருந்தும், 2 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் இதுவரையில் 8706 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதில் 4644 கொரோனா நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், 4043 கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளர்கள் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள அதேவேளை 19 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

பாடசாலைகளை தற்போதைக்கு மீள திறக்கக் கூடாது

அம்மு

மாவை- சுமந்திரன் தரப்பிற்குள் தீவிர சமரச முயற்சி: மாவை விதித்த கறார் நிபந்தனை!

அம்மு

நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் மிருக காட்சிசாலைகள்

அம்மு