16.1 C
Manchester
27 June 2022
Image default
விளையாட்டு

கிரிக்கெட் வீரர் பானுக்க ராஜபக்சவுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடத் தடை

இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக்க ராஜபக்சவுக்கு சகல விதமான கிரிக்கெட்களிலுமிருந்து 2 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

சமூக மற்றும் பிற ஊடகங்களில் நேர்காணல்களில் கலந்துகொண்டதன் மூலம் வீரர்களுக்கான 2019ஃ2020க்குரிய ஒப்பந்தத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கடப்பாடுகளை மீறினார் என்ற குற்றத்தின் பேரில் அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் பானுக்க ராஜபக்சவுக்கு 5,000 அமெரிக்க டொலர்கள் அபராதத்தையும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விதித்துள்ளது. இதேவேளை, கொழும்பில் தற்போது உயிரி பாதுகாப்பு குமிழிக்குள் பயிற்சிகளில் ஈடுபட்டுவரும் 13 வீரர்கள் கொண்ட குழுவில் பானுக்க ராஜபக்சவை இணைப்பதற்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

தேசிய குழாம் தேர்வுக்கு அவசியமான உடற்தகுதி பானுக்க ராஜபக்ச இருப்பதை அடுத்தே அவரை குழுவில் இணைக்க தீர்மானிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உயிரி பாதுகாப்பு குமிழிக்குள் அவர் நாளை இணைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

கோலி கையெழுத்திட்ட ஜெர்சி.. விலை இவ்வளவா?

SudarSeithy

ஐபிஎல் தொடரில் சதத்தை தவறவிட்ட வீரர்கள் பட்டியல் இதோ

SudarSeithy

அவங்க இல்லைனா என்ன? நான் ரெடி! இந்திய அணிக்கு மறைமுகமாக சிக்னல் கொடுத்த தினேஷ் கார்த்திக்: வைரலாகும் புகைப்படம்

SudarSeithy

Leave a Comment