செய்தி

இலங்கை வந்த சீனக்குழு; தூதுவர் மட்டும் தனிமைப்படுத்தலில்!

வெளிநாட்டு இராஜதந்திரிகளின் விஜயங்களின்போது தனிமைப்படுத்தல் சட்டம் அவர்கள் மீது பாய்வதில்லை என்கிற விமர்சனங்கள் உள்ளநிலையில், இலங்கை வந்துள்ள சீனத் தூதுவர் ட்சீ சென்ஹாங் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவருடன் இலங்கையில் உள்ள பிரதான பி.சி.ஆர் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறினை திருத்துவதற்காக விசேட சீனத்தூதுக் குழுவும் விஜயம் செய்துள்ளது.

அதன்படி இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் புதிய தூதுவர் ட்சீ சென்ஹொங் (Qi Zhenhong) நேற்று இரவு கொழும்பை வந்தடைந்துள்ளார்.

ட்சீ சென்ஹொங் பி.சி.ஆர்.பரிசோதனையினை நிறைவு செய்து சீன ஈஸ்டன் ஏயார்லைன்சிற்கு சொந்தமான எம்.யு231 விமானம் மூலம் கட்டுநாயக்க விமானநிலையத்தினை வந்தடைந்ததாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து புதிய தூதுவர், அடுத்து வரும் இருவாரங்களுக்கு சுயதனிமைப்படுத்தலில் தன்னை ஈடுபடுத்தவுள்ளதாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரத்தை சரிசெய்ய சீன நிறுவனத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு நேற்றையதினம் இரவு இலங்கைக்கு வந்துள்ளதாகவும் சீனத் தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதுவரை செயலிழப்பிற்கான காரணம் தெளிவாக இல்லை என்றும், 7 நாட்களும் 24 மணித்தியாலமும் பல மாதங்களாக இயங்கிய பிற இயந்திரங்களும் சரிபார்க்கப்பட்டு பராமரிக்கப்படும் என்றும் சீனத் தூதரகம் கூறியுள்ளது.

இதேவேளை இலங்கையில் பி.சி.ஆர் இயந்திரத்தின் செயலிழப்பு காரணமாக, கிட்டத்தட்ட 20,000 பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் தாமதமாகியுள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Bigg Boss Tamil – Season 4 – DAY 26 [30.10.2020] – VIDEO

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

அமைச்சரானார் நாமல்! பதவிப்பிரமாணத்தின் பின்னர் இட்டுள்ள பதிவு

அம்மு

விபத்தில் படுகாயமடைந்த அரச உத்தியோகஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் மரணம்

அம்மு

எனக்கு எதிராக வாக்களித்து என்னைத் தோற்கடியுங்கள்!

அம்மு