செய்தி

வத்தளை நிறுவனமொன்றில் 49 பேருக்கு கொரோனா தொற்று!

கொழும்பை அண்மித்த வத்தள பகுதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் 49 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த நிறுவனத்தில் சுமார் 1000 தொழிலாளர்கள் இருந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் நேற்று மட்டும் 162 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு ஒன்று தொடக்கம் 15 வரையில் 75 நோயாளர்களும் கொழும்பு நகருக்கு வெளியே ஏனைய நோயாளர்களும் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றனர்.

அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் நவகமுவ பிரதேசத்தில் இனங்காணப்பட்டதுடன் அங்கு 29 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர்கள்தவிர கிருலப்பனையில் 03, தெஹிவளையில் 01, கடுவலையில் 01, முகத்துவாரத்தில் 04, மட்டக்குளியில் 08, மாதிவெல பகுதியில் 14, அவிசாவளையில் 01, கொட்டாஞ்சேனையில் 03, நுகேகொடையில் 02, ஹோமாகமவில் 02, வெள்ளவத்தையில் 07 மற்றும் மொரட்டுவ பகுதியில் 12 என மொத்தம் 162 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Bigg Boss Tamil – Season 4 – DAY 26 [30.10.2020] – VIDEO

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

இலங்கையில் மீண்டும் கொரோனா பரவலாம்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

அம்மு

மோட்டார் சைக்கிளின் அதிவேகத்தால் திடீரென பறிபோன இளைஞனின் உயிர்

அம்மு

77 கிலோ கிராம் நைட்ரிக் அமிலத்துடன் இருவர் கைது

அம்மு