செய்தி

வேலணையில் நபர் சென்றுவந்த யாழ் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

யாழ்.வேலணையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் யாழ்.நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள், மற்றும் சிகை அலங்கரிப்பு நிலையம், உணவகம் ஆகியவற்றுக்கு சென்றுவந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்.நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றுக்கும், குறித்த நோயாளி சென்றுவந்த , சிகை அலங்கரிப்பு நிலையம் மற்றும் உணவகம் ஆகியன மூடப்பட்டிருக்கின்றது.

குறித்த நபர் 2 நாட்களாக வேலணையிலிருந்து முச்சக்கர வண்டியில் யாழ்ப்பாணம் வந்து சென்றுள்ள நிலையில் முச்சக்கர வண்டி ஓட்டுனர் அடையாளம் காணப்பட்டு கொட்டடியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த நபர் சென்றுவந்த இடங்கள் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

இதேவேளை குறித்த நபருடைய உறவினர்கள், மற்றும் அயலவர்கள் சிலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Bigg Boss Tamil – Season 4 – DAY 26 [30.10.2020] – VIDEO

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

முன்னாள் பிரதம நீதியரசருக்கு உயர் பதவியை வழங்கும் அரசாங்கம்

அம்மு

எதிர்கட்சியே இல்லாத பிரதேச சபை இலங்கையில் உதயம்!

அம்மு

யாழில் மூன்று கடைகளில் கைவரிசையை காட்டிய திருடர்கள்! பல லட்சம் ரூபாய் கொள்ளை

அம்மு