செய்தி

யாழில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் அனைவரும் கொழும்பிலிருந்து வந்தவர்களே!

யாழ் மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட அனைவரும் கொழும்பிலிருந்து வந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

உடுவில் அம்பலவாணர் வீதியில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட தாயும், மகளும் கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் இருந்து வந்தவர்கள். அவரது கணவர் பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பின்னர் கர்ப்பிணியான மனைவியும், மகளும் உடுவிலில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்திருந்தார்.

அதேவேளை, யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டவர், வெள்ளவத்தையில் இயங்கும் பிரபல உணவகமான ஹொட்டல் உரிமையாளர் ஆவார். அவரது ஹொட்டலில் பணியாற்றிய புங்குடுதீவை சேர்ந்த இருவரும், வேலணையை சேர்ந்த ஒருவரும் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.

மட்டக்களப்பில் பேலியகொட கொத்தணியை தவிர்ந்து, அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் கொழும்பிலிருந்து வந்தவர்களே.

கொழும்பு உள்ளிட்ட மேல்மாகாணத்தில் கொரோனா அபாய வலயங்களில் இருந்து பிற இடங்களிற்கு வந்து தங்கியுள்ளவர்கள் குறித்து பொதுமக்கள் சுகாதார வைத்திய அதிகாரிகளிடம் தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

Bigg Boss Tamil – Season 4 – DAY 26 [30.10.2020] – VIDEO

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

சொன்னதை செய்து காட்டினார் விக்னேஸ்வரன் ! மொத்த சொத்து விபரமும் இதோ…

அம்மு

நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடை! நிபுணர் குழுவின் உறுப்பினர் வெளியிட்ட தகவல்

அம்மு

யாழ்ப்பாணம் சங்கானையில் நள்ளிரவில் இனம் தெரியாதோர் அட்டகாசம்; வயோதிப தம்பதி மீது வாள்வெட்டு

அம்மு