செய்தி

அடைக்கலம் தந்த வீடு: புலிகளின் உறுப்பினர் உயிரை மாய்த்த வீடு; முன்னாள் எம்.பி சந்திரசேகரன் கைதாக காரணமான சம்பவம்; நீண்டகால அரசியல்கைதியான மேரியம்மா காலமானார்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெ.சந்திரசேகரனுடன் கைதான ஜேக்கப் மேரியம்மா இன்று (31) காலமானார்.

விடுதலைப் புலிகளின் கரும்புலி போராளியொருவரை கொட்டகலையிலுள்ள தனது வீட்டில் மறைத்து வைத்திருந்தமைக்காக அவர் கைது செய்யப்பட்டு, நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்த பின்னர் விடுதலையானவர்.

வரதன் என்ற பெயருடைய விடுதலைப் புலிகளின் கரும்புலி போராளியை, ஜேக்கப் மேரியம்மாவின் வீட்டில் மறைந்திருக்க ஏற்பாடு செய்தார் என்பது சந்திரசேகரம் மீதான குற்றச்சாட்டு.

சம்பவதினத்தில், பொலிசார் கொட்டகலையிலுள்ள அவரது வீட்டை தட்டியபோது, அங்கு தங்கியிருந்த விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களில் ஒருவர் கதவை திறந்துள்ளார். பொலிசாரை கண்டதும், வீட்டின் பின்பக்கத்தினால் தப்பிச் சென்று விட்டார். (பின்னர் சரணடைந்தார்)

அவர் எச்சரித்தபடி தப்பியோடியதால் உசாரடைந்து, வீட்டில் தங்கியிருந்த மற்றையவரான புலிகளின் கரும்புலி படையணியை சேர்ந்த வரதன், அறைக்குள்யேயே சயனைட் அருந்தி உயிரிழந்தார்.

இதையடுத்து மேரியம்மா கைதாகி பல வருடங்கள் சிறையிலிருந்தார்.

அவர் உயிரிழந்ததையடுத்து, முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தனது பேஸ்புக பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அந்த பதிவு-தியாகிகள் எல்லோரும் பிரபலமானவர்கள் இல்லை. பல தியாகிகள் மௌனமாகவே மரணித்துப் போகிறார்கள். அப்படியான ஒருவர்தான் மேரி அக்கா (ஜேக்கப் மேரியம்மா)

மலையக மக்கள் முன்னணி ஸ்தாபக தலைவர் சந்திரசேகரன் கைதாவதற்கு காரணமாக இருந்த குண்டுவெடிப்பு சூத்திரதாரி வரதனை தனது பாதுகாப்பில் தங்கவைத்திருந்தார் என்பதுதான். அப்படித்தான் என்றாலும் அவர் தங்கியிருந்தது கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில். வரதன் தங்கியிருந்த வீடு மேரி அக்காவுடையது. வரதனுக்கு துணையாக இருந்தவர் மலையக மக்கள் முன்னணி அரசியல் செயற்பாட்டாளர் இராமன் ராஜாராம்.

பெ.சந்திரசேகரன் – பி.ஏ.காதர் – வி.டி.தர்மலிங்கம் மூவரும் சிறையில் இருந்தது போல் இன்னும் பலர் இதே விடயத்துடன் தொடர்புபட்டதாக கைதானார்கள். சிறைபட்டார்கள். அவர்களுள் தோழர் ராஜாராமும், அவரது சகோதரர் ராமகிருஷ்ணனும் மேரி அக்கா வும் கூட அடக்கம்.

தன் வாழ்நாளில் பாதியை சிறையில் கழித்த மேரி அக்கா மீண்டும் தோட்டத் தொழிலாளியாக வேலை செய்தார். நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்த அவரைப் பார்க்க தோழர் ராஜாராமுடன் அண்மையில் சென்றிருந்தேன். அவரைப் பற்றிய முழுமையான கட்டுரை ஒன்றைப் பதிவு செய்து மலையகத் தியாகிகளின் பட்டியலில் இந்த பெண் ஆளுமை பற்றியும் பதிவு செய்ய வேண்டும் என்பது எனது எண்ணம். அந்த தகவல்களை சிறுக சிறுக தேடிக் கொண்டிருக்கும் போது இன்று காலை அழைப்பெடுத்த தோழர் ராஜாராம் அவரின் இழப்பு செய்தியைச் சொன்னார்.
அவர் இறப்பதற்கு முன் அவரது தியாகம் மலையக வரலாற்று ஏடுகளில் பதியப்பட்டதான பத்திரிகை செய்தியை அவர் படித்துவிட வேண்டும் என்ற எனது நோக்கம் நிறைவேறாதது கவலைதான். ஆயினும் அவரை நேரடியாக சென்று பார்த்து எழுதப் போகும் எனது கட்டுரைக்கு ஆதாரம் ஆக்கிக் கொண்ட சந்தர்ப்பம் அமைந்தது.

அவரைச் சந்தித்த பொழுது மிகுந்த சிரமத்துக்கு மத்தியிலேயே நாம் பேசுவதை செவிமடுத்தார். அப்போது “பாராளுமன்ற உறுப்பினர் வந்திருக்கிறார்” என்றார் ராஜாராம். என்னைக் கவனமாக பார்த்துச் சலனமின்றி இருந்தார் மேரி அக்கா.  “உங்களைப் பார்க்க அண்ணன் சந்திரசேகரன் வந்திருக்கிறார்” என்றதும் அவரது உதட்டில் ஒரு சிரிப்பும் முகத்தில் ஒரு மலர்ச்சியும் தெரிந்தது. அண்ணன் வரமாட்டார் என்பதை அறியாதவரல்ல அவர். ஆனால் அந்தப் பெயரின் பின்னால் அவர் கொண்டிருந்த அரசியல் பற்றினை வெளிப்படுத்திய மலர்ச்சி அது.
மேரி அக்காவின் தலையை வருடி விடைபெற்றேன்.

மலையகத்தின் தியாகிகள் பலர் மௌனமாகவே விடைபெற்றுப் போகிறார்கள். அதில் மேரி அக்காவும் ஒருவர்.

Bigg Boss Tamil – Season 4 – DAY 26 [30.10.2020] – VIDEO

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

உயர் தரத்தில் மூன்று பாடங்களில் சித்தியடையாதவர்களுக்கும் மருத்துவ நியமனம்

அம்மு

செம்மணி பகுதியில் பெருந்தொகை மருத்துவ கழிவுகளை கொட்டிய தனியார் நிறுவனம்: ஏ9 வீதியை மறித்து போராட்டம்!

அம்மு

ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை

அம்மு