14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

யானைக்கு மந்திரம் ஓத முற்பட்டவர் பரிதாபமாக பலி

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் யானையின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவர் கிண்ணியா – ஆலேங்கேணி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி விஸ்வகேது (72 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

4 பேர் மீன் பிடிப்பதற்காக சென்றபோது யானையைக் கண்டவுடன் மற்றவர்கள் ஓடிய நிலையில் உயிரிழந்தவர் யானைக்கு மந்திரம் செய்ய முற்பட்ட வேளை யானை தாக்கியதாகவும் தெரியவருகின்றது.

இதனையடுத்து யானையின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கிண்ணியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாகவும் தற்போது அவருடைய சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிண்ணியா பொலிஸார் கூறியுள்ளனர்.

Related posts

கட்டிட பொருள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து

SudarSeithy

வெளிநாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்ட உயிரிழந்த கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள்

SudarSeithy

குருணாகலில் கடத்தப்பட்ட சொகுசு கார் கண்டுபிடிப்பு!

SudarSeithy

Leave a Comment