14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்றை வெகுவிரைவில் வெளியிட எதிர்பார்த்துள்ளதுடன் செயல்முறை பரீட்சை தொடர்பில் ஒரு வார காலத்திற்குள் உறுதியான தீர்மானத்தை கல்வி அமைச்சின் செயலாளர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு வழங்குவார் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம், 2020 ஆம் ஆண்டுகொரோனா தொற்றுக்கு மத்தியில் பரீட்சைகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். கடந்த வருடம் நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு வழமைக்கு மாறாக விரைவாகவே வெளியிடப்பட்டிருந்தது. உயர்தர பரீட்சை பெறுபேறும் நெருக்கடியான சூழ்நிலையில் வெளியிடப்பட்டிருந்தது.

தொற்று நிலைமை காரணமாக 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரன தர பரீட்சை உரிய காலத்தில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. சிறந்த திட்டமிடலுக்கமைய சாதாரண தர பரீட்சை கடந்த மார்ச் மாதம் முதலிரண்டு வாரத்தில் நடைபெற்றது. பரீட்சை பெறுபேற்றை ஜூன் மாதம் வெளியிட ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தபோதிலும் புதுவருட கொரோனா தொற்று காரணமாக கடந்த காலங்களை காட்டிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பாடசாலை மற்றும் பரீட்சைகள் திணைக்கள செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டன. சாதாரன தர பரீட்சையின் எழுத்துமூல விடைப்பத்திரங்கள் திருத்தும் பணிகள் முழுமையாக நிறைவுபெற்று அவை தரவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

சாதாரண தர பரீட்சையின் செயல் முறை பரீட்சையின் புள்ளிகளை தரவுப்படுத்துவது மாத்திரமே எஞ்சியுள்ளதாகவும் செயல் முறை பரீட்சையை நடத்துவது தொடர்பில் கல்வி அமைச்சுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் கூறிய அவர் , ஒரு வாரத்துக்குள் உறுதியான தீர்மானத்தை வழங்குவதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பசிலின் அதிரடி ஆட்டம் ஆரம்பமா?

SudarSeithy

இலங்கையில் நடந்த அபூர்வ சத்திரசிகிச்சை: உயிர் தப்பிய பெண்

SudarSeithy

வடக்கின் பிரதம செயலாளர் மனைவி உட்பட்ட உயர் அதிகாரிகள் நால்வருக்கு தொற்று!

SudarSeithy

Leave a Comment