யாழ்பாணத்தில் லீ குழு மீது ஆவா குழுவினர் வாள்வெட்டு தாக்குதல் லீ குழு ஒருவர் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆவாகுழு தலைவர் அகிலசுமன் உட்பட 3 பேரை நேற்று மாலை கைது செய்துள்ளனர்.
அத்துடன் அவர்களிடம் இருந்து 2 வாள், 3 கோடரி, மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோட்டர் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் கோண்டாவில் பகுதியில் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றதில் அவரின் கைதுண்டிக்கப்பட்டு அதனை வைத்தியர் ஒருவர் 6 மணிநேர சத்திரசிகிச்சையில் பொருத்தியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில் மீசாலை காட்டுப்பகுதிலும், யாழ்ப்பாணத்தில் ஒழிந்திருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.