சுற்றுலா

பாசிக்குடா… சுற்றி பார்க்கலாம்

கிழக்கு மாகாணத்தின் வாழைச்சேனைக்கு அருகாமையில் இருக்கும் அழகிய கற்பரப்புத்தான் பாசிக்குடா.

இந்த பிரதேசம் சுற்றுலா பயணிகளின் உல்லாசபுரி என்றால் அது மிகையாகாது. அலைகளின் அகோரமில்லாத, ஆழமில்லாத விசாலமான கடற்பரப்பு இங்கு சிறப்பானது.

பாசிக்குடா கடற்பரப்பில் எவரும் பயமில்லாது குளிக்கலாம். ஏனெனில் இங்கு ஆழமோ ஆபத்தோ கிடையாது.

அதுமட்டுமல்லாமல் மிக நீண்ட தூரம் கடலுக்குள் நடந்து செல்லலாம். சுமார் 5 அடி ஆழமான பகுதிவரை தாராளமாக நீந்திச் செல்லலாம்.

இப்படி சுற்றுலா சிறப்பு மிக்க பாசிக்குடா பகுதி இப்பொழுது பாரிய அபிவிருத்தி கண்டு வருகிறது. நட்சத்திர அந்தஸ்துடைய பல ஹோட்டல்கள் இங்கு உருவாகிக் கொண்டிருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் சுற்றுப்புறமும் நன்கு அபிவிருத்தி கண்டு வருகின்றமை இப்பிரதேசத்தின் சிறப்பாகும். 

மேலும் சுற்றுலா சொல்ல கூடிய இடம் பற்றி அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Travel Facebook :- Liked

Travel Facebook Group :- Joined

Travel Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

’சிங்கராஜா வனம்’ சுற்றி பார்க்கலாம்

அம்மு

அரச மாளிகை

அம்மு

பசுமை காட்சிகளோடு ஓர் ரயில் பயணம்…

அம்மு