வாழ்க்கைமுறை

தொப்பையை குறைக்க எளிமையான வழி! தினமும் இரவில் இதை குடியுங்கள்

ஒருவரது உடல் பருமன் அதிகரிப்பதற்கு அல்லது குறைவாக இருப்பதற்கு மரபணுக்கள் மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் தான் காரணம்.

அதோடு உடல் எடை அதிகரிப்பதற்கு உடலுழைப்பு இல்லாமை, மோசமான டயட் அல்லது உணவுப் பழக்கங்கள், தூக்கமின்மை, அளவுக்கு அதிகமான மன அழுத்தம் மற்றும் குறிப்பிட்ட மருந்துகள் போன்றவைகளும் காரணங்களாகும்.

மேலும் என்னதான் முயற்சிகள் மேற்கொண்டாலும் பெரிதாக இருக்கும் தொப்பையை குறைக்க முடியாதவர்களுக்கு, இதோ வீட்டின் சமையலையில் இருக்கும் பொருட்களை வைத்து தொப்பையை குறைக்கும் பானம் தயாரிக்கலாம்.

தேவையானவை

  • தேங்காய்ப்பால் – 2 கிளாஸ்
  • தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்
  • துருவி இஞ்சி – 1 ஸ்பூன்
  • மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
  • மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன்
  • தேன் – 2 ஸ்பூன்

செய்முறை

முதலில் இரண்டு கிளாஸ் அளவு தேங்காய்ப் பாலை எடுத்துக் கொள்ளுங்கள்.அதனுடன் ஒரு ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும்.

பின்பு இவற்றுடன் ஒரு டீஸ்ப்பூன் அளவுள்ள துருவிய இஞ்சியை சேர்க்க வேண்டும். பின்னர் அரை டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் ஆகியவை சேர்க்கவேண்டும்.

இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி லேசாக சூடாகி குடிக்கும் பதத்திற்கு சூடாகிவிட்டால் இறக்கி விட வேண்டும். பின் சுவைக்காக இரண்டு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை

இந்த பானத்தை தினமும் இரவில் குடியுங்கள் பானை போல் இருக்கும் தொப்பை மாயமாகி விடும். இந்த பானம் செரிமானத்திற்கும் கொழுப்பை கரைக்கவும் பயன்படுகிறது.

மேலும் இது வயிற்றில் இருக்கக்கூடிய அமிலத்தின் அளவை சீராக்கும் இதனால் துரிதமாக உணவு செரிக்கப்படும். அதோடு இது சத்துக்கள் உறிந்து கொள்ளவும் துணை புரிகிறது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Health News Facebook :- Liked

Facebook Group :- Joined

Health News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

உங்களுக்கு சாப்பிட்ட உடனே மீண்டும் பசி எடுப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறதா? இந்த நோயாக இருக்கலாம் உஷார்

அம்மு

கர்ப்ப காலத்தில் புளி சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?

அம்மு

உங்கள் தலை முடி அடர்த்தியாக வளர வேண்டுமா? இந்த பேக்கை தடவுங்கள்

அம்மு