இந்தியா

74 வயதிலும் மாமனார் டார்ச்சர்… கணவன் மனநிலை சரியில்லாதவர்! ஒட்டு மொத்த குடும்பத்தை தீர்த்து கட்டிய மருமகள் சம்பவத்தில் திருப்பம்

தமிழகத்தில் மருமகள் ஒருவர் மாமனார், கணவர் மற்றும் மாமியார் என ஒட்டு மொத்த குடும்பத்தையும் தீர்த்து கட்டிய சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை சவுகார்பேட்டையில் ஜெயமலா என்பவர் சொத்துக்காக மாமனார், மாமியார், கணவனை துப்பாக்கியால் துடி துடிக்க சுட்டு கொன்றார்.

இந்த கொலை சம்பவம் நடப்பதற்கு முன்பு, ஜெயமலா நீதிமன்றத்தில் 7 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆனால், அவர் மாமனாரோ ஒரு பைசா கூட தரமுடியாது என்று கூறிய நிலையில், மாமனார், மாமியார் மற்றும் கணவர் என மூன்று பேரையும் வீட்டிற்கே சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

இதில் மாமனாரை மட்டும் காது வழியாகவும், மற்றவர்களை நெற்றிப்பொட்டிலும் சுட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் ஜெயமாலா அண்ணன் உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆனால், ஜெயமாலா மட்டும் தப்பிவிட்டதால் பொலிசார் அவரை தேடி வந்தனர்.

இதற்கிடையில், ஜெயமாலா அண்ணன் பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் இந்த கொலைக்கான இரண்டு காரணங்கள் தெரியவந்தது.

அதில், ஒன்று, மருமகளுக்கு மாமனார் பாலியல் தொல்லை தந்து வந்துள்ளார். மாமனாருடன் சேர்த்து, வீட்டில் உள்ள சொந்தக்காரர்களும் அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். அவருடைய கணவர் ஷீத்தல் மனநிலை சரியில்லாதவர் என்பதால், அவர் இதை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.

கணவர் மனநிலை பாதிக்கப்பட்டவர், உடல்நலம் பாதிக்கப்பட்டவர் என்பதை மறைத்தே இந்த திருமணம் நடந்துள்ளது. இதனால் ஜெயமலா மிகுந்த வேதனையில் இருந்த போது, அவருடைய 74 வயது மாமனார், பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதை எல்லாம் கூறி, ஜெயமால் அவர் வீட்டில் அழுதுள்ளார். அதன் பின்னரே அவர் குடும்பத்தை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். முதலில் சொத்து பிரச்சனைக்காக நடந்தது என்று கூறப்பட்ட நிலையில், தற்போது பாலியல் தொல்லையும் ஒரு காரணம் என்பது தெரியவந்தது.

பொலிசாரிடம் கடந்த ஒருவாரமாக சிக்காமல் இருந்த ஜெயமலா, வேறு மாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து பொலிசாருக்கு ஜெயமாலா உட்பட 3 பேர் டெல்லியில் உள்ள ஆக்ரா ரோட்டில் நடந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன் பின் பொலிசார் அங்கு சென்றவுடன் ஜெயமலா தப்பி ஓட முயற்சிக்க, பொலிசார் ஜெயமலா உடன் இருந்த விலாஷ், ராஜி ஷிண்டே என மூன்று பேரையும் கைது செய்தனர்.

அவர்கள் விரைவில் தமிழகம் கொண்டுவரப்படுவார்கள் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

World News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

World News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றிய காசிக்கு உதவிய வெளிநாட்டு நண்பன் யார்? விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்

அம்மு

திருமணம் முடிந்து 22 மாதங்கள் ஆச்சு… மனைவி என்னை கிட்டவே விடல! விபரீத முடிவு எடுத்த கணவன்

அம்மு

வெளிநாட்டில் கணவன் உயிரிழந்த அடுத்த நாளே குழந்தை பெற்றெடுத்துள்ள இளம்பெண்! இறந்த செய்தியை இன்னும் அறியாத பரிதாபம்

அம்மு