உலகம்

10 நாட்களுக்கு அவர் முகம் அமிலத்தில் முக்கி எடுக்கப்பட்டது! வெளிநாட்டில் கொடூரமாக கொல்லப்பட்ட இந்தியப்பெண்.. வெளிவந்த முக்கிய தகவல்

அவுஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட இந்திய பெண்ணின் வழக்கில் எந்தவொரு துப்பும் இன்னும் கிடைக்காத நிலையில் முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

சிட்னி நகரிலிருந்து 40 கிலோ மீட்டர் மேற்கே அமைந்துள்ள வெஸ்ட் ஹாக்ஸ்டான் பகுதியின் புதர் காட்டில் இருந்து கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முகம் மற்றும் உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுடன் ஒரு பெண் மீட்கப்பட்டார்.

பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பொலிசார் விசாரணையில் உயிரிழந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த 39 வயதான மோனிகா ஷெட்டி என கண்டறியப்பட்டது. அவர் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த கொலையானது அப்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஐந்து முதல் பத்து நாட்கள் வரை அவரது முகம் அமிலத்தில் முக்கி எடுக்கப்பட்டதால் அவர் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பொலிசார் இந்த வழக்கு குறித்து விசாரித்ததில் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.

இதுவரை எந்த முகாந்திரமும் இல்லாத இந்த வழக்கை சரியான வழியில் விசாரணை மேற்கொள்வதற்காக நியூ சவுத் வேல் அரசு இந்த வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு $500,000 சன்மானமாக கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

இதன் மூலம் இந்த வழக்கில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழும் என பொலிசார் கருதுகின்றனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

World News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

World News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

மரணத்தின் பிடியில் இருந்து காப்பாற்றப்பட்ட நபர்! முதலையை பழிக்கு பழி தீர்க்க கிராம மக்கள் செய்த செயல்

அம்மு

சீனா தப்பியது… உலக நாடுகளை புரட்டி எடுக்கும் உறுதி: பகீர் கிளப்பிய முக்கிய நிபுணர்

அம்மு

ரஷ்யாவின் முதுகில் குத்திய சீனா… கடும் கோபத்தில் புடின்! என்ன செய்துள்ளது தெரியுமா?

அம்மு