இந்தியா

உயிருக்கு உயிராக காதலித்த பெண் தம்பியுடன் ஓட்டம்! அண்ணனின் விபரீத முடிவு: சோகத்தில் மூழ்கிய குடும்பம்

தமிழகத்தில் ஒரே பெண்ணை காதலிப்பதில், தம்பி மற்றும் அண்ணன்களுக்கிடையே போட்டி நிலவிய நிலையில், அண்ணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள சல்லிகோடாங்கிபட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியகருப்பன். 26 வயது மதிக்கத்த இவர் டிப்ளமோ படித்து விட்டு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியில் சூப்பர்வைசராகப் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு சின்னகருப்பன் என்ற 24 வயதில் தம்பி உள்ளார். சின்னகருப்பன், மைக்செட் ஆப்பரேட்டராக வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் பெரியகருப்பன் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப்பட்டியில் வசிக்கும் தனது உறவுக்கார 16 வயது பெண்ணைக் காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்ட தம்பி சின்ன கருப்பன் அந்தப் பெண்ணைக் காதலிக்கத் தொடங்கியுள்ளார், அந்தப் பெண்ணும் சின்ன கருப்பனைக் காதலித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி, வெளியூருக்குச் சென்றுவிட்டனர். தான் உயிருக்கு உயிராகக் காதலித்த பெண் தன் தம்பியுடன் ஓட்டம் பிடித்ததை அறிந்ததும் மனமுடைந்த பெரிய கருப்பன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பெரிய கருப்பன் இறந்ததைக் கேள்விப்பட்ட காதல் ஜோடியினர் துக்கம் தாங்க முடியாமல் விஷம் குடித்தனர். இருவரும் மயங்கிய நிலையில், அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

World News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

World News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

திருமணமான 2 மாதத்தில் காட்டில் தலை இல்லாமல் கிடந்த அழகிய இளம்பெண்ணின் உடல்! கணவனே கொன்றது அம்பலம்.. பகீர் பின்னணி

அம்மு

பிஞ்சு குழந்தையை படுக்கையில் இருந்து தூக்கி வீசிய தந்தை: உறவினர்கள் வெளியிட்ட பகீர் காரணம்

அம்மு

கயிறு கட்டி தரதரவென இழுத்துச் செல்லப்படும் சடலங்கள்… வைரலான வீடியோவுக்கு பின் தெரிந்த உண்மை

அம்மு