உலகம்

பீட்ஸா வாங்கியதால் கொரோனா பரவியதாக கூறிய நபரால் முடக்கப்பட்ட அவுஸ்திரேலியா: உண்மை தெரிந்ததால் மக்கள் ஆத்திரம்

அவுஸ்திரேலியாவில், பீட்ஸா வாங்கியதால் தனக்கு கொரோனா பரவியதாக ஒருவர் கூறிய தகவல் கடும் அச்சத்தை ஏற்படுத்தியது.

தெற்கு அவுஸ்திரேலிய தலைநகரான Adelaide என்ற நகரில் உள்ள பீட்ஸா கடை ஒன்றில் தான் பீட்ஸா வாங்கியதாகவும், கொரோனா தொற்றிய ஒருவர் தனக்கு பீட்ஸா கொடுத்ததால், அந்த பீட்ஸா பெட்டியைத் தொட்ட தனக்கு கொரோனா வந்துவிட்டதாகவும் ஒருவர் கூறியிருந்தார்.

கொரோனா இதுபோல் பெட்டியைத் தொடுவது மூலம் எல்லாம் பரவாது என்பதால், அப்படி ஒரு கொரோனா வைரஸ் பெட்டி மூலம் பரவியிருக்கும்பட்சத்தில், இந்த கொரோனா வைரஸ் புதிய பயங்கரமான ஒன்றாக இருக்குமோ என சுகாதார அலுவலர்கள் கலக்கம் அடைந்தார்கள்.

தெற்கு அவுஸ்திரேலியா முடக்கப்பட்டது, அலுவலகங்கள் மூடப்பட்டன, தொழில்கள் மீண்டும் நிறுத்தப்பட்டன, மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

ஆனால், அந்த நபர் உண்மையில் பீட்ஸா கடையில் உணவு வாங்கிய வாடிக்கையாளர் அல்ல, அவர் அதே கடையில் வேலை செய்பவர் என்பதும், அவர் ஏற்கனவே கொரோனா தாக்கிய ஒருவருடன் தொடர்பிலிருந்ததால்தான் அவருக்கு கொரோனா தொற்றியுள்ளதே தவிர, பீட்ஸா பெட்டியைத் தொட்டதால் கொரோனா பாவவில்லை என்பதும் பின்னர் விசாரணையில் தெரியவந்தது.

பொய் சொல்லி தெற்கு அவுஸ்திரேலியாவையே முடக்க வைத்த அந்த நபர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 36 வயதான ஒருவர். அவர் தற்காலிக விசாவில் அவுஸ்திரேலியா வந்தவர், அவரது விசா அடுத்த மாதம் காலாவதியாகிறது.

அவர் எதற்காக இப்படி பொய் சொன்னார் என்பது குறித்த விவரங்களை பொலிசார் வெளியிடவில்லை.

அத்துடன், அவர் செய்த செயலுக்கு சட்டப்படி தண்டனையும் இல்லை, ஆகவே இப்படி நாட்டையே முடக்கிய ஒருவருக்கு அபராதம் கூட விதிக்கப்படப்போவது இல்லை. ஆனால், அவர் இப்படி நாட்டை முடக்கியதன் பின்னணியில் ஏதேனும் குற்றச்செயல் இருக்குமா என பொலிசார் விசாரிக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், காரணமின்றி நாட்டை முடக்கி, தங்களுக்கு இடையூறை ஏற்படுத்தியதால் மக்கள் அந்த நபர் மீது கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் அவர்கள்.

இதற்கிடையில் ஆறு நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

World News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

World News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை எந்த நிபந்தனையுமின்றி சந்திக்க நான் தயார்! அறிவித்த பிரதமர்

அம்மு

பேஸ்புக்கில் தவறுதலாக ஏற்பட்ட நட்பு! 62 வயது பெண்ணை மணந்த 26 வயது இளைஞன்.. எப்படி காதல் மலர்ந்தது தெரியுமா?

அம்மு

சுவிட்சர்லாந்தில் எட்டு மாதங்களாக யாரும் உரிமை கோராத தங்கக்கட்டிகள்: அவற்றின் மதிப்பு என்ன தெரியுமா?

அம்மு