விளையாட்டு

IPL-ல் பெங்களூரின் தோல்விகளுக்கு இந்த ஒரு வீரரே முக்கிய காரணம்! முன்னாள் வீரர் ஓபான் டாக்

பெங்களூரு அணி இந்த ஐபிஎல் தொடரில் தோல்விகளை சந்தித்ததற்கு முக்கிய காரணம் ஆரோன் பின்ச் என்று முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில், இந்த முறை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லியின் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்று வரை தகுதி பெற்று, டெல்லியிடம் அடிவாங்கியது.

நல்ல பலம் வாய்ந்த அணியாக இருந்த பெங்களூரு அணி, இப்படி தோல்விகளை சந்தித்தற்கு முக்கிய காரணம் ஆரோன் பின்ச் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், பின்ச் பெங்களூரு அணிக்கு இந்த சீசனில் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தார். அவருக்கு மிகப்பெரிய தொகையை கொடுத்து பெங்களூரு அணி எடுத்தது.

மொயின் அலிக்கெல்லாம் ஆடும் லெவனில் வாய்ப்பே கிடைக்கவில்லை. ஆனால் பின்ச் பெரும்பாலும் அனைத்து போட்டிகளிலும் ஆடினார்.

படிக்கல்லுடன் இணைந்து அவரும் நன்றாக ஆடியிருந்தால், கோஹ்லி மற்றும் டிவில்லியர்ஸ் மீதான பொறுப்பும் அழுத்தமும் குறைந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Sport News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Sport News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்ப முடியும் என்ற நம்பிக்கையை விடவில்லை: தவான்

அம்மு

நாங்கள் இதற்காக தயாராகி கொண்டிருக்கிறோம் – பிராவோ

அம்மு

டோனியின் ஓய்வு முடிவை எப்போது புரிந்து கொள்ளலாம்: சங்கக்காரா சூசகம்

அம்மு