விளையாட்டு

இலங்கை முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான நுவான் சொய்சா குற்றவாளி என நிரூபணம்

இலங்கையின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான நுவான் சொய்சா, ஐ.சி.சி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூன்று குற்றங்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 2018-ல் ஐ.சி.சி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சொய்சா மீது குற்றம் சாட்டப்பட்டது, மேலும் அவர் ஒரு தீர்ப்பாயத்தின் முன் விசாரணைக்கு ஆஜரான பின்னர் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.

சொய்சாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் மற்றும் எதிர்வரும் நாட்களில் அவருக்கான கூடுதல் தடைகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி-யின் சட்ட விதிகளான, 2.1.1, 2.1.4, 2.4.4 ஆகிய மூன்றில் சொய்சா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது:

டி-10 லீக்கில் பங்கேற்வர்களுக்கான ஈசிபி ஊழல் தடுப்பு நடத்தை விதிகளை மீறியதாக எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) சார்பாக ஐ.சி.சி-யும் சொய்சா மீது குற்றம் சாட்டியுள்ளது, மேலும் இந்த குற்றச்சாட்டின் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Sport News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Sport News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

அவர் புத்திசாலி… ஐசிசி தலைவர் பதவிக்கு பொருத்தமானவர்: குமார் சங்கக்காரா

அம்மு

ஐபிஎல் வெற்றிக்கு வெளிநாட்டு வீரர்கள் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள்: கேகேஆர் சிஇஓ சொல்கிறார்

அம்மு

அறிகுறிகளே இல்லாமல் 5 முறை கொரோனா பாதிப்பு!.. பிரபல வீரருக்கு வந்த மகிழ்ச்சியான செய்தி

அம்மு