செய்தி

திருகோணமலையில் கைதான நபருக்கு மூதூர் நீதிமன்றம் வழங்கிய கடுமையான உத்தரவு!

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 41,000 ரூபா கள்ள நோட்டுகளை வைத்திருந்த இருவரை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் முகம்மட் மஹ்ரூப் உத்தரவிட்டார்.

கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 27 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மூதூர் பெரிய பாலம் பகுதியில் அமைந்துள்ள உணவு விடுதியொன்றில் வைத்து ​வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூதூர் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐந்தாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் ஏழும், ஆயிரம் கள்ள நோட்டுகள் ஐந்தும், ஐந்நூறு கள்ள நோட்டுகள் இரண்டும் வைத்திருந்த நிலையில் நேற்று (20) இரவு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக மூதூர் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் பயன்படுத்திய கணினி, தொலைநகர், அச்சுப்பொறி மற்றும் அச்சு பதிப்பு இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

கனடாவில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம்

அம்மு

கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளில் அமுல் செய்யப்பட்டு வரும் ஊரடங்கு சட்டம் தொடர்பில் முக்கிய அறிவித்தல்

அம்மு

தேசிய கட்சியில் தனித்து தமிழர்கள் மாத்திரமே போட்டியிடுவது வரலாறு! கருணாவின் குற்றச்சாட்டுக்கு பதில்

அம்மு